Published : 04 Feb 2022 09:44 AM
Last Updated : 04 Feb 2022 09:44 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், கூட்டத்தை தவிர்க்க டோக்கன் முறையில் வேட்பு மனு தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 12, 838 பதவியிடங்களுக்கு வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதனிடையே. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கு பிப்ரவரி 4 ஆம் தேதி இன்றே கடைசி நாள்.
குறுகிய காலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால் அரசியல் கட்சிகளிடையே அந்தந்த தொகுதிகளில் கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் விரைவாக வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு நிர்வாக்கிகள் தள்ளப்பட்டனர்.
தொகுதிப் பங்கீடு, கூட்டணி இழுபறி காரணமாக பல வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய கால தாமதம் ஏற்பட்டது.
குறிப்பாக நேற்று தான் திமுக தனது இறுதிக் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும் பிரதான கட்சிகளான திமுக-அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
கடந்த புதன்கிழமை மட்டும் 10,153 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று தேர்தல் அலுவலகங்களில் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர். இதனால் தேர்தல் அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டது.
வேட்பு மனு தாக்கல் நடைபெறும் இடங்களில் கட்சி நிர்வாகிகளிடையே மோதல் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஆவர்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். மாலை 5 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுவுள்ளதால் அதிக அளவிலான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கூட்டத்தை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் வேட்பு மனுக்களை பெறுவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பிப் 5 ஆம் தேதி சனிக்கிழையான நாளை வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றுள்ளது. 7 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள், அன்றே தேர்தலில் போட்டியிடவுள்ள இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT