

சென்னை: தமிழகத்தில் 2001-06-ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.9 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீது 2006-ல் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். ஊழல் தடுப்புச் சட்டம்,1998-ன்கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதை அடிப்படையாக வைத்துஅமலாக்கத் துறையும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.
அமலாக்கத் துறை நடவடிக்கை
பின்னர் அதிமுகவில் இருந்து விலகிய அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்து, தற்போது மீன்வளத் துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில், அவர் மீதான வழக்கு குறித்து அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது. இதில், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துஉள்ளது.
அதைத் தொடர்ந்து 14.5.2001முதல் 31.3.2006 வரையிலான காலத்தில் அனிதா ராதாகிருஷ் ணன் வாங்கிய சொத்துகள், அவரது குடும்பத்தினர் வாங்கியசொத்துகள் என சுமார் ரூ.6கோடியே 50 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
இதில், 160 ஏக்கர் நிலம் உட்பட அசையும் மற்றும் அசையா சொத்துகள் என 18 வகை சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.