Published : 02 Feb 2022 12:41 PM
Last Updated : 02 Feb 2022 12:41 PM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் | ஒருவரின் வாக்கை யாரோ செலுத்திவிட்டால் 'ஆய்வுக்குரிய வாக்குத் தாள்' மூலம் வாக்களிக்க வசதி

மதுரை: வாக்களிக்க வந்தவரின் வாக்கை ஏற்கெனவே எவரேனும் பதிவு செய்துவிட்டால், அவரை ‘ஆய்வுக்குரிய வாக்குத் தாள்’ மூலம் வாக்களிக்க அனுமதிக்கலாம் என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலை நடத்துவதற்கான பல்வேறு விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும், அதிகாரங்களையும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது. அதில் வாக்களிக்க வந்தவர்களின் வாக்கை மற்றவர்கள் ஏற்கெனவே பதிவு செய்தால், எந்த நடைமுறையை கடைபிடிப்பது என்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான அறிவுரைகள் வருமாறு:

ஏதேனும் ஒரு வாக்காளரின் வாக்கை ஏற்கெனவே எவரேனும் பதிவு செய்துவிட்டதாக தெரியவந்தால், தற்போது வாக்களிக்க வந்த வாக்காளரின் அடையாளம் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்து, அவரை ஆய்வுக்குரிய வாக்குத் தாள் (Tendered Ballot Paper) மூலம் வாக்களிக்க அனுமதிக்கலாம். அவரை EVM மூலம் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. இம்மாதிரி ஆய்வுக்குரிய வாக்குத் தாள்களை தனியே கணக்கு வைத்து (படிவம் 22)-ல் பதிவு செய்து வாக்குப்பதிவு முடிநததும் தனி உறையில் இட்டு சீல் வைத்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதுபோல், ஒரு வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து அழியாத மை வைத்த பிறகு, அவர் வாக்களிக்க விருப்பமில்லை என கூறினால், விதி 71ன்படி படிவம் 21 பதிவேட்டில் குறிப்பு காலத்தில் Refused to vote (or) Let without Vote என எழுதி வாக்கு சாவடி அலவலர் கையொப்பமிட்டு, அதன் அருகில் வாக்காளர் கையொப்பத்தினையும் பெற வேண்டும். ஒரு வாக்காளர் வாக்களிக்கும் ரகசியத்தை மீறினால், விதி 69-ன்படி அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் படிவம் 21 பதிவேட்டின் குறிப்பு காலத்தில் Not Allowed to vote, Voting Procedure Violating என குறிப்பிட்டு, அவரை வாக்குச்சாவடியை விட்டு வெளியே அனுப்பிவிட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x