‘விஷு’ தினத்தையொட்டி முதல்வர் வாழ்த்து

‘விஷு’ தினத்தையொட்டி முதல்வர் வாழ்த்து
Updated on
1 min read

‘விஷு’ திருநாள், மலையாள மக்களின் வாழ்வில் வசந்தத்தையும், அன்பையும், அமைதியையும் வழங்கட்டும் என்று கூறி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஷு தினத்தையொட்டி முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட வாழ்த் துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டு திருநாளாம் விஷு திருநாளில், மலையாள மக்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகில் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் பேணிக்காத்து வாழும் மலையாள மக்கள் விஷு பண்டிகையன்று, தங்கள் இல்லங்களில் அரிசி, காய்கனிகள், கொன்றை மலர், தங்க நாணயங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஷுக் கனியை முதலில் கண்டு, இப்புத்தாண்டு தங்கள் வாழ்வில் நலமும், வளமும் செழிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டி வழிபடுவார்கள். இப்புத்தாண்டு நாளில் உற்றார் உறவினர்களுடன் ஒன்றுகூடி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு அறுசுவை விருந்துண்டு மகிழ்வார்கள்.

இப்புத்தாண்டு மலையாள மக்களின் வாழ்வில் வசந்தத்தையும், அன்பையும், அமைதியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை எனது விஷு திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in