Published : 26 Apr 2016 08:33 AM
Last Updated : 26 Apr 2016 08:33 AM
விவசாய நிலங்களை பாதுகாப் பதற்கான திட்டங்கள் இல்லாமல் விவசாயத்துக்கு தனி அமைச் சகம், தனி அமைச்சர், தனி நிதி நிலை அறிக்கை என்று அறிவிப்ப தால் மட்டும் வேளாண்மை தழைத்துவிடுமா, என்று அரசி யல் கட்சிகளுக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
தமிழக அரசியல் வரலாற் றில் இதுவரை இல்லாத வகை யில் திமுக, பாமக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் விவ சாயத்துக்கும், நீர்ப்பாசனத் துக்கும் முக்கியத்துவம் அளித்து அடுக்கடுக்கான வாக்குறுதிகளை தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வழங்கியுள்ளன. வெளிவர உள்ள அதிமுக, தேமுதிக- மக்கள்நலக் கூட்டணி ஆகியவற்றின் தேர்தல் அறிக்கைகளிலும் அதன் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. இது தமிழக அரசியலில் இதுவரை இல்லாத மாற்றம். இதை வரவேற்கிறேன்.
அதே வேளையில், விவசாயத் துக்கு தனி அமைச்சகம், தனி அமைச்சர்கள், தனி நிதிநிலை அறிக்கை, கரும்பு, நெல்லுக்கு ஆதரவு விலை உயர்வு, ஏரிகள், ஆறுகளை தூர் வாருதல், இணைத்தல் போன்ற நட வடிக்கைகளால் மட்டும் விவ சாயம் தழைத்துவிடுமா?
விவசாயம், நீர்ப்பாசனம் ஆகியவற்றுக்கு நிலம் மட்டுமே ஆதாரம். அந்த விவசாய நிலத்தை மாற்றுத் திட்டத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட் டோம் என்று தேர்தல் அறிக்கை யில் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது.
உண்மையிலேயே விவசா யத்தை காக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் விரும்பினால் முதலில், விவசாய நிலங் களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிப்பதற் கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன்மூலம் நிலங் களை மாற்றுத் திட்டத்துக்கு பயன் படுத்துவதை தடுக்க வேண்டும். நீர்ப்பாசனத் துறை, பொதுப் பணித் துறை ஆகியவற்றை தன்னாட்சி பெற்ற அமைப்பாக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் பாரபட்சமின்றி, நீர்நிலை ஆக்கிர மிப்புகளை அகற்றவும், புதிய வாய்க்கால்களை உருவாக்கவும், பராமரிக்கவும் முடியும். காவிரிப் பாசன விவசாயிகளை அச்சுறுத்தி வரும் ஷேல் காஸ் திட்டத்தை முடக்குவோம் என்று எந்த கட்சியும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT