Published : 31 Jan 2022 07:11 PM
Last Updated : 31 Jan 2022 07:11 PM

மூடப்படாத பாதாள சாக்கடைக்குள் விழுந்த இளைஞர் உயிரிழப்பு:  திருப்பூர் மக்கள் கோபம்

திருப்பூரில் மூடப்படாத பாதாள சாக்கடைக்குள் விழுந்த இளைஞர் உயிரிழப்பு

திருப்பூர்: மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடைக்குள் இளைஞர் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் திருப்பூர் மாநகர மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி எம்.எஸ். நகர் 18-வது வார்டு வி. கே. ஆர். நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வரும் சூழலில், பாதாள சாக்கடைக் குழிகள் திறக்கப்பட்டு மூடப்படாமல் உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு பாதாள சாக்கடைக் குழி திறந்து இருப்பதை பார்க்காமல் அவ்வழியாக நடந்து சென்ற நபர், தவறி பாதாள சாக்கடைக்குள் விழுந்து உயிரிழந்தார்.

இன்று அதிகாலை அப்பகுதி பொதுமக்கள், பாதாள சாக்கடைக் குழிக்குள் தலைகீழாக விழுந்தவரைக் கண்டு உடனடியாக வடக்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வடக்கு போலீஸார், பாதாள சாக்கடைக்குள் விழுந்து நபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார் விசாரணையில், அவர் திருப்பூர் தொட்டிமண்ணரை அறிவொளி நகரை சேர்ந்த நடராஜ் மகன் பூபதி(24) என்பது தெரியவந்தது. திருமணமாகாத நிலையில் பெயின்டராக வேலை செய்து வந்த நிலையில் நேற்று முன் தினம் பாதாள சாக்கடைக்குள் விழுந்து உயிரிழந்தார்.

ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை வேண்டும்: இது தொடர்பாக அப்பகுதியை முற்றுகையிட்ட பொதுமக்கள் கூறியது: ''பாதாள சாக்கடை கடந்த 3 மாதங்களாக திறந்து கிடக்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். உடனடியாக பாதாள சாக்கடை குழிகளை மூட வேண்டும்.'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x