Published : 31 Jan 2022 06:55 PM
Last Updated : 31 Jan 2022 06:55 PM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம், ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதேபோல் தேனியில் 5 நகராட்சிகள், சேலத்தில் 6 நகராட்சிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 நகராட்சிகள், திருவள்ளூரில் 5 நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1 நகராட்சி, ஈரோடு மாவட்டத்தில் 4 நகராட்சிகளிலும், திருச்சியில் 5 நகராட்சிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அரியலூர், மயிலாடுதுறை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்குட்பட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் சேலம் மாநராட்சியில் போட்டியிடும் 60 வார்டுகளுக்கான வேட்பாளர்கள், ஆவடி மாநகராட்சி- 48, திருச்சி மாநகராட்சி- 65, மதுரை மாநகராட்சி- 100, சிவகாசி மாநகராட்சி - 48, தூத்துக்குடி மாநகராட்சி - 60, தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி-30, அல்லி நகராட்சி- 33, கூடலூர் நகராட்சி - 21, போடிநாயக்கனூர் நகராட்சி -32, கம்பம் நகராட்சி- 33, சின்னமனூர் நகராட்சி - 27, சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி- 30, மேட்டூர் நகராட்சி - 30, ஆத்தூர் நகராட்சி - 33, நரசிங்கபுரம் நகராட்சி - 18, தாரமங்கலம் நகராட்சி- 27, இடங்கணசாலை நகராட்சி - 27, செங்கல்பட்டு நகராட்சி- 32, மறைமலைநகர் நகராட்சி - 21, நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி- 30, பூவிந்தவல்லி நகராட்சி- 19, திருவேற்காடு நகராட்சி-18, திருநின்றவூர் நகராட்சி- 27, திருவள்ளூரர் நகராட்சி-27, திருத்தணி நகராட்சி- 20, செய்யா் (திருவத்திபுரம்) நகராட்சி- 27, வந்தவாசி நகராட்சி- 24, ஆரணி நகராட்சி- 31, திருவண்ணாமலை நகராட்சி - 39, கிருஷ்ணகிரி நகராட்சி-32;
வானி நகராட்சி- 25, கோபிசெட்டிப்பாளையம் நகராட்சி-30, சத்தியமங்கலம் நகராட்சி- 27, புன் செய்புளியம்பட்டி நகராட்சி- 18, துறையூர் நகராட்சி- 24, முசிறி நகராட்சி- 24, துவாக்குடி நகராட்சி- 21, மணப்பாறை நகராட்சி- 26, லால்குடி நகராட்சி- 22, ஜெயங்கொண்டம் நகராட்சி- 21, அரியலூர் நகராட்சி-18, நாகப்பட்டினம் நகராட்சி-34, வேதாரண்யம் நகராட்சி-21, சீர்காழி நகராட்சி- 24, மயிலாடுதுறை நகராட்சி- 36, மேலூர் நகராட்சி- 27, சாத்தூர் நகராட்சி- 24, அருப்புக்கோட்டை நகராட்சி-36, விருதுநகர் நகராட்சி-36, ராஜபாளையம் நகராட்சி- 42, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி- 33, காரைக்குடி நகராட்சி-36, தேவகோட்டை நகராட்சி-27, சிவகங்கை நகராட்சி - 27, மானாமதுரை நகராட்சி - 26, கோவில்பட்டி நகராட்சி-36, திருச்செந்தூர் நகராட்சி- 27, குளச்சல் நகராட்சி-24 ஆகிய இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, அதிமுக சார்பில் இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிக்கப்பட்டு, ஒரு வார்டுக்கு இருவர்கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சித் தலைமையிடம் வழங்கப்பட்டிருந்தது. அதிமுக தனது முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியிட்டுள்ளது. கடலூர் மாநகராட்சி வார்டு உறுப்பினர், கடலூர் கிழக்கு, வடக்கு, மேற்கு, விழுப்புரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதில், கடலூர் மாநராட்சியில் போட்டியிடும் 45 வார்டுகளுக்கான வேட்பாளர்கள், கடலூர் கிழக்கில் சிதம்பரம் நகராட்சி - 33, கடலூர் வடக்கில் நெல்லிக்குப்பம் - 30, பண்ருட்டி - 33, கடலூர் மேற்கில் விருதாச்சலம் - 33, திட்டக்குடி- 24, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகராட்சி- 42, திண்டிவனம்- 33, தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி- 32 ஆகிய 305 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT