Published : 25 Apr 2016 10:30 AM
Last Updated : 25 Apr 2016 10:30 AM
சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி 16 நாட்களுக்குப் பிறகு, கும்பகோணம் அதிமுக வேட்பாளர் ராம.ராமநாதன் (51) மாற்றப்பட்டு, நகர் மன்றத் தலைவரான ரத்னா சேகர் புதிய வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். இந்த அறிவிப்பு கட்சியினர், பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
1991-ல், தான் போட்டியிட்ட முதல் தேர்தலில், அப்போதைய திமுக கூட்டணி வேட்பாளர் எஸ்.குமார சாமியை (ஜனதா கட்சி) பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராம.ராமநாதன், 1996, 2001, 2006 ஆகிய 3 தேர்தல்களில் திமுக வின் கோ.சி.மணியிடமும், 2011-ல் திமுகவின் சாக்கோட்டை க.அன்பழ கனிடமும் தொடர்ந்து தோல்வியைத் தழுவினார்.
தற்போது 6-வது முறையாக களத்தில் இறக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல், பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பிரச் சாரம் செய்து வந்தார். நேற்று காலை கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற பெட்டி காளியம்மன் கோயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியபோது, வேட்பாளர் மாற் றப்பட்ட தகவல் வந்ததால், பிரச் சாரத்தை அப்படியே முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
புதிய வேட்பாளர்
கும்பகோணம் தொகுதி அதிமுக புதிய வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள ரத்னா சேகர் (50) கும்ப கோணம் நகர் மன்றத் தலைவராக உள்ளார். எஸ்எஸ்எல்சி படித்துள்ளார். இவரது கணவர் பி.எஸ்.சேகர், ரதி மீனா டிராவல்ஸ் உரிமையாளர். மகன் பிரகாஷ்பிரபு, மகள் டாக்டர் ப்ரியதர்ஷினி.
ரத்னாவின் கணவர் பி.எஸ்.சேகர், அதிமுகவில் கும்பகோணம் நகரச் செயலாளராக இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா குடும்ப ஆதவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, கும்ப கோணம் நகரச் செயலாளராக இருந்த பி.எஸ்.சேகர் நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்பில் ராம.ராமநாதன் நியமிக்கப்பட்டார்.
வேட்பாளர் திடீரென மாற்றப் பட்டது குறித்து அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தது: தொடர்ந்து 4 முறை தோல்வியைச் சந்தித்த ராமநாதன், மீண்டும் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு சந்தேகம்தான் என கட்சியினர் தொடர்ந்து மேலிடத் துக்கு தெரிவித்ததும் இந்த மாற்றத் துக்கு காரணம். அதனால், பணம், செல்வாக்கு, கட்சியினரிடம் உறுதி யான பிடிமானம் கொண்டுள்ள பி.எஸ்.சேகரின் மனைவிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கும்பகோணம் தொகுதியின் முதல் அதிமுக பெண் வேட்பாளர்.
நகர் மன்றத் தலைவராக இருந்து பிரபலமானவர். எதிரணி வேட்பாளர்களை அனைத்து வகை யிலும் எதிர்த்து நிற்கக்கூடியவர் என்பதால், வேட்பாளராகத் தாமத மாக அறிவிக்கப்பட்டாலும் ரத்னா சேகருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாச மாக உள்ளது என்றனர்.
ராம.ராமநாதன், 1996-ல் முதல் முறையாகத் தோற்றபோது, “நான் எம்எல்ஏவாகவும், ஜெயலலிதா முதல் வராகவும் ஆகும்போது, அவரது தலைமையில்தான் திருமணம் செய்துகொள்வேன்” என சபதம் எடுத்துக்கொண்டதாகவும் ஆனால், அதன் பிறகு 2 முறை ஜெயலலிதா முதல்வரானபோதும், இவர் தோல்வியுற்றதால், சபதத்தின்படி இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற பேச்சு கும்பகோணத்தில் பிரபலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT