Published : 19 Jun 2014 09:08 AM
Last Updated : 19 Jun 2014 09:08 AM
ஆட்டோ தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ள தால் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதாக இருந்த ஆட்டோக்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே ஆட்டோக்கள் இன்று வழக்கம் போல் ஓடும்.
சென்னையில் ஓடும் ஆட்டோக் களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி மீட்டர் கட்டணம் நிர் ணயிக்கப்பட்டு உடனடியாக அம லுக்கு வந்தது. ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் மீண்டும் பேரம் பேசி கட்டணம் வசூல் செய்வ தாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் மற்றும் போக்குவரத்து துறை இணைந்து அதிக கட்ட ணம் வசூலிக்கும் ஆட்டோக் களை பறிமுதல் செய்து வரு கின்றன. அதன்படி, 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போக்குவரத்து போலீஸாரின் அத்துமீறலை கண் டித்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் இன்று (வியாழக்கிழமை) வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறி வித்தன. இந்நிலையில் போக்கு வரத்து துறை உயர் அதிகாரிகளு டன் ஆட்டோ தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக் களை விடுவிப்பது, அபராத தொகையை ரூ.2,500ல் இருந்து ரூ.100 ஆக குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. இதனால், ஏஐடியுசி உட்பட 7 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத் தத்தை வாபஸ் பெற்றுள்ளன.
சிஐடியு நிர்வாகி மனோகரன் கூறுகையில், ‘‘ஆட்டோ கட்ட ணத்தை மாற்றியமைக்க முத் தரப்பு கமிட்டி, டிஜிட்டல் மீட்டரை விரைவில் வழங்க வேண்டும். எங்களை பொறுத்தவரையில் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறவில்லை. மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள் ளோம். போக்குவரத்துதுறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் கெடுபிடி அதிகமாக இருந்ததால், நாங்கள் தேதி அறிவித்து வேலை நிறுத்தம் செய்வோம். இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT