Published : 29 Jan 2022 08:09 AM
Last Updated : 29 Jan 2022 08:09 AM
தி.மலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் அடுத்த ஆனந்தல்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி சேட்டு மகன் பிரகாஷ்ராஜ். இவர், மன்சுராபாத் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பை, கடந்த 2018-ல் முடித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில், 950 மதிப்பெண் பெற்றுள்ளார். 2018 மற்றும் 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் பங்கேற்று 130 மற்றும் 341 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனாலும், மருத்துவ கனவு நிறைவேற 3-வது முயற்சியாக, கடந்தாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் பங்கேற்றார். அதன் முடிவுகள் வெளியானது.
அதில், 512 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக் கீட்டின் கீழ், தரவரிசையில் மாநில அளவில் 2-வது இடத்தையும் மற்றும் மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற கலந் தாய்வில் பங்கேற்ற பிரகாஷ்ராஜ், சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்எம்சி) தேர்வு செய்து, தனது மருத்துவ கனவின் முதல் படியில் அடியெடுத்து வைத்துள்ளார்.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் பிரகாஷ்ராஜிக்கு சேத்துப்பட்டு வட்டாட்சியர் கோவிந்தராஜன், ஆசிரியர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT