Published : 01 Apr 2016 10:32 AM
Last Updated : 01 Apr 2016 10:32 AM

அரசு மருத்துவமனைகளில் இதுவரை ஸ்கேனுக்காக நோயாளிகளிடம் ரூ.299 கோடி கட்டணம் வசூல்: ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெற இலவசமாக்கப்படுமா?

தமிழக அரசு மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் எடுக்க நோயாளிகளிடம் இதுவரை தமிழ் நாடு மருத்துவச் சேவை கழகம் ரூ.299 கோடி கட்டணம் வசூல் செய்துள்ளது. அனைத்து மருத்துவ சிகிச்சைகளைப்போல், ஸ்கேன் எடுப்பதையும் இலவசமாக்க வேண்டும் என்றும், இதை முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தற்போதைய மருத்துவச் சூழலில், நோயின் ஆரம்பகட்டத்தை துல்லியமாகக் கண்டறிய சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன்கள் அவசியப் படுகின்றன. எம்ஆர்ஐ ஸ்கேன் களை தனியாரிடம் எடுக்க குறைந்த பட்சம் ரூ.6 ஆயிரம் வரை செல வாகும். இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தனியார் மருத்துவ மனைகளில் மருத்துவ சிகிச்சை யைத் தொடர முடிவதில்லை.

அதனால், ஏழை, நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடி வந்தால் இங்கும் ஸ்கேன் எடுக்க ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை கட்டணம் செலுத்த வேண்டி யுள்ளது. இந்த கட்டணத்தை செலுத்த தயாராக இருந்தாலும் உடனடியாக ஸ்கேன் எடுத்துவிட முடியாது. அரசு மருத்துவமனை களில் சிகிச்சையில் உள்ள நோயாளி களுக்கே ஸ்கேன் எடுப்பதில் முன்னுரிமை வழங்கப்படுவதால் வெளிமருத்துவமனைகளில் இருந்து பரிந்துரை செய்யப்படும் நோயாளிகள் ஸ்கேன் எடுக்க குறைந்தபட்சம் 20 நாட்கள் காத்தி ருக்க வேண்டியுள்ளது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் நோயாளிகள் ஒரு நோயின் ஆரம்பகால நோயைக் கண்டறிவதற்கே இவ்வளவு செலவு செய்து காத்திருக்க வேண்டியுள் ளது. மற்ற மருத்துவ சிகிச்சை களைப்போல் அரசு மருத்துவமனை களில் ஸ்கேன் எடுப்பதையும் இலவசமாக்க வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து மதுரையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறியதாவது:

தமிழக அரசு மருத்துவமனை களில் ஸ்கேன்கள் செயல்பாட்டை தமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் தமிழ் நாடு மருத்துவச் சேவை கழகம் நிர்வாகம் செய்கிறது. தமிழகத் தில் சென்னையில் 6 அரசு மருத்து வமனைகளிலும், தமிழகத்தின் பிற மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகளில் வெறும் 10 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது.

தேனி, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இன்னும் ஸ்கேன் வசதிகள் ஏற்படுத்தப் படவில்லை. தமிழகத்தில் 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மட்டுமே எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது. அனைத்து மாவட்ட தலைமை மருத் துவமனைகளிலும் ஸ்கேன் வசதி களை ஏற்படுத்துவதோடு இதை இலவசமாக்கினால் மட்டுமே ஏழை நோயாளிகள் முழுமையான சிகிச்சை பெற முடியும்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் எம்ஆர்ஐ ஸ்கேன் மையங்கள் மூலமாக இதுவரை ரூ.68,15,21,500 கட்டணமாக நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை அரசு ராஜீவ்காந்தி நினைவு மருத்துவமனையில் அதிகபட்சமாக ரூ.19,62,47,000 வரை வசூலாகியுள்ளது. சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் சேர்த்து தமிழக அரசு மருத்துவமனைகளில் இது வரை மொத்தம் ரூ.299,48,91,806 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த பணத்தைக் கொண்டு மற்ற அரசு மருத்துவமனைகளுக்கு ஸ்கேன் வசதிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. ஸ்கேன் வசதி ஏற்படுத்த தனி நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஸ்கேன் எடுக்க நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்க வேண்டும்

ஆனந்தராஜ் மேலும் கூறியதாவது: இரவு நேர விபத்து மற்றும் இதர தீவிர சிகிச்சைக்காக வருபவர்களுக்கு உடனடியாக நோய்க்கான தீவிரத்தை எம்ஆர்ஐ ஸ்கேன் மூலமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனைகள் தனியாரைப்போல இன்னும் மேம்பாடு அடையாமல் உள்ளன.

அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுப்பதை 24 மணி நேரமும் இலவசமாக செயல்படுத்தினால் ஏழை நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்ற உதவியாக இருக்கும். இந்த வாக்குறுதியை தமிழக முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய வேண்டும் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x