Published : 24 Jan 2022 12:28 PM
Last Updated : 24 Jan 2022 12:28 PM
சென்னை: "தமிழக மீனவர்களிடமிருந்து பிடித்த படகுகளை ஏலம் விட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிட துடிக்கிறது இலங்கை அரசு. இனியும் மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையை கையாள்வது சரியானது தானா?" என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு: "ஒரு பக்கம் இலங்கை கடற்படையினரின் தாக்குதல், இன்னொருபுறம் புதிதாக கிளம்பியிருக்கிற இலங்கை கடற்கொள்ளையரின் தாக்குதல் என தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
நம்முடைய மீனவர்களிடமிருந்து பிடித்த படகுகளை ஏலம் விட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிட துடிக்கிறது இலங்கை அரசு. இனியும் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக இப்பிரச்சினையைக் கையாள்வது சரியானதுதானா?
தமிழக மீனவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு வருவது இந்தியாவிற்கே அவமானமில்லையா? இதனை நிரந்தரமாக தடுத்த நிறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. வெறும் கடிதம் எழுதுவதோடு நிறுத்திவிடமால் மத்திய அரசை வலியுறுத்தி அதனை செய்திட வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது" என்று தினகரன் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT