Published : 11 Apr 2016 12:21 PM
Last Updated : 11 Apr 2016 12:21 PM

தொகுதி ஒதுக்கீட்டிலும் தள்ளாடுகிறது கட்சித் தலைமை..?- அதிர்ச்சியில் கோவை திமுக

'வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை எல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்கு தள்ளிவிடுவதை பார்க்கும் போதே இங்கே கட்சி எவ்வளவு பலகீனமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது' என்று விரக்தி ததும்ப பேசிக் கொண்டி ருக்கின்றனர் கோவை திமுகவினர்.

கோவை மாவட்டத்தில் 10-க்கு 10 தொகுதிகளை கடந்த 2011 தேர்தலில் வென்றது அதிமுக. அதற்கு முன்பு 2006 தேர்தலில், கோவை கிழக்கு, வால்பாறை ஆகிய 2 தொகுதிகளை மட்டுமே திமுக கூட்டணி வென்றது. 2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் திமுக தோல்வியையே சந்திக்க, கோவை மாவட்டமே அதிமுகவின் கோட்டை என்ற புகழை தக்க வைத்துக் கொண்டது.

அதில் அதிர்ந்துபோன திமுக தலைமை, கோவை மாவட்டத்தை, கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு, கோவை மாநகர் வடக்கு என்று 4 கட்சி மாவட்டங்களாக பிரித்து சி.ஆர்.ராமச்சந்திரன், தமிழ்மணி, நாச்சிமுத்து, வீரகோபால் ஆகியோரை செயலாளர்களாக நியமித்தது. ஒருங்கிணைந்த கோவை மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியை, கட்சியின் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினராக்கி, சேலம் மாவட்ட பொறுப்பாளராகவும் நியமித்தது கட்சித் தலைமை.

இதன் மூலம் கோஷ்டி அரசியல் முழுமையாக ஒழிக்கப்படும் என்று நம்பியது திமுக தலைமை. ஆனால் அந்த நம்பிக்கை, தற்போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு நடப்பதை பார்க்கும்போது தகர்ந்து கொண்டிருப்பதாக அச்சம் தெரிவிக்கிறார்கள் உள்ளூர் நிர்வாகிகள்.

இது குறித்து கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்திலேயே திமுக கூட்டணி ஜெயிக்கும் என்று நம்பப்பட்ட தொகுதி கோவை தெற்கு. அதை காங்கிரஸுக்கு கொடுத்துவிட்டார்கள். அதேபோல் தொண்டாமுத்தூரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். அதற்கு நிகராக ஒரு வேட்பாளரை இங்கே நிறுத்த வேண்டியது கட்சியின் கடமை. அதை செய்யாமல் திடீரென்று மனித நேய மக்கள் கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். கோவையை 4 கட்சி மாவட்டங்களாகப் பிரித்து 4 செயலாளர்களை நியமித்த பின்னும் பலகீனமாக உள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளதையே இந்த தொகுதி பங்கீடு காட்டுகிறது. தலைமையின் முடிவுக்கு அர்த்தமும் இருக்கிறது.

கோவை மாவட்டத்திலேயே திமுக கூட்டணி ஜெயிக்கும் என்று நம்பப்பட்ட தொகுதி கோவை தெற்கு. அதை காங்கிரஸுக்கு கொடுத்துவிட்டார்கள். அதேபோல் தொண்டாமுத்தூரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். அதற்கு நிகராக ஒரு வேட்பாளரை இங்கே நிறுத்த வேண்டியது கட்சியின் கடமை. அதை செய்யாமல் திடீரென்று மனித நேய மக்கள் கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். கோவையை 4 கட்சி மாவட்டங்களாகப் பிரித்து 4 செயலாளர்களை நியமித்த பின்னும் பலகீனமாக உள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளதையே இந்த தொகுதி பங்கீடு காட்டுகிறது. தலைமையின் முடிவுக்கு அர்த்தமும் இருக்கிறது.

உதாரணமாக, 7 மாதங்களுக்கு முன்பே தேர்தல் நிதி வசூல் செய்ய கட்சித் தலைமை, நன்கொடை புத்தகங்களை வழங்கியிருந்தது. 'நமக்கு நாமே' பயணமாக ஸ்டாலின் வந்தபோது, தேர்தல் நிதி வசூலில் இறங்க கேட்டபோது, 'மக்களிடம், வியாபாரிகளிடம் சென்று பெயரை கெடுக்க வேண்டாம். வேட்பாளர்கள் தங்கள் சொந்தப் பணத்தையே செலவு செய்யட்டும்' என்று தெரிவிக்கப்பட்டது. திடீரென்று ஒரு மாதத்துக்கு முன்பு தேர்தல் நிதி வசூலை முடுக்கிவிட உத்தரவிட்டது தலைமை.

கோவையில் 4 மாவட்டத்திலும் தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.4 கோடி இலக்கும் நிர்ணயித்தார்கள். அதில் ஒரே ஒரு மாவட்டச் செயலாளர் ரூ.1 கோடியும், மற்றவர்கள் ரூ.75 லட்சம், ரூ.70 லட்சம், ரூ.55 லட்சமும் வசூலித்து கட்சித் தலைமையிடம் அளித்தும் விட்டார்கள். அப்படி நிதி வசூல் செய்யப்போகும்போது பலரும் பொங்கலூர் பழனிச்சாமி வரலையா? என்றே கேட்டார்கள். அவர்தான் இன்னமும் திமுகவின் மாவட்டச் செயலாளர் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய மாவட்ட செயலாளர்களை ஒவ்வொரு இடத்திலும் அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. ஏற்கெனவே மிகவும் கட்சி பலகீனப்பட்டு கிடக்கும் மாவட்டத்தில், இவர்களை முன்னிறுத்தி, எப்படி தேர்தலை சந்திப்பது என்பதை தலைமை உணர்ந்தே உள்ளது. எனவேதான் கூட்டணிக் கட்சிகளுக்கு, கோவை தொகுதியா எடுத்துக்கொள்ளுங்கள் என்று கொடுக்கும் நிலை நீடிக்கிறது. அதனால் கோவை மாவட்ட தொகுதிகளில் சீட் கேட்டு பணம் கட்டி எதிர்பார்த்து உள்ளவர்கள் திகைத்து போய் உள்ளார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x