Published : 24 Jan 2022 09:36 AM
Last Updated : 24 Jan 2022 09:36 AM

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குக்கு இடையே கோயில்கள் முன் எளிமையாக நடந்த திருமணங்கள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன் எளிமையாக நடந்த திருமணத்தில் மணமகள் கழுத்தில் தாலி கட்டிய மணமகன் .

மதுரை

தை மாத முகூர்த்த நாள் என்பதால் முழு ஊரடங்குக்கு இடையே நேற்று மதுரையில் உள்ள கோயில்களின் முன்பாக எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றன.

கரோனா பரவலைக் கட்டுப் படுத்தும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கும் அறி விக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமலானதால் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திரு மணங்களை சில கட்டுப்பாடு களுடன் நடத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. நேற்று தை மாத முகூர்த்த நாள் என்பதால் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திரு மணங்கள் மதுரையில் உள்ள கோயில்கள் முன்பாக நடை பெற்றன. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வாசலில் எளிமையான முறையில் மணமகன்கள், மணமகள்களுக்கு மங்கல நாண் அணிவித்தும், மாலைகளை மாற்றிக்கொண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

மணமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் முகக்கவசம் அணிந் திருந்து, சமூக இடை வெளியைக் கடைப்பிடித்தனர்.

அதேபோல், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், தல்லாகுளம் பிரசன்னவெங்கடாஜலபதி கோயில், அழகர்கோவில் கள் ளழகர் கோயில் உள்ளிட்ட முக்கியக் கோயில்கள் முன்பாக எளிமையான முறையில் திரும ணங்கள் நடைபெற்றன.

இதனிடையே, கோயில்கள் முன் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவதைத் தவிர்க்குமாறு அங்கு பணியில் இருந்த போலீஸார் அறிவுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x