Published : 09 Jun 2014 10:30 AM
Last Updated : 09 Jun 2014 10:30 AM
விழுப்புரம் அருகே பல்ல வர் கால ஓவியங்கள் சிதைந்து கொண்டிருப்பது வேதனையளிக் கிறது என்று விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கோ. செங்குட்டு வன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: விழுப்புரம் பனை மலையில் பல்லவப் பேர ரசன் மகேந்திரவர்மனின் வழித் தோன்றலான இராஜசிம்மனால் தாளகிரீசுவரர் கோயில் கட்டப் பட்டது. குன்றின் மீது உள்ள இந்த கற்கோயில் மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில் மற்றும் காஞ்சி கைலாசநாதர் கோயில்களின் காலத்தைச் சேர்ந்தது.
இங்கு பதினாறு பட்டை களுடன் கூடிய லிங்கமாகக் காட்சி யளிக்கிறார் மூலவர். பல்லவர், சோழர், நாயக்கர் மற்றும் ஆற் காடு நவாப் ஆகியோரின் கல்வெட்டுக்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன. பனைமலைக் கோயிலின் வரலாற்றுச் சிறப்பினை மேலும் சிறப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது இங்குள்ள பல்லவர் கால ஓவியம்.
கோயிலின் வடக்கில் உள்ள சிற்றாலயத்தில் வடக்கு, மேற்குச்சுவர்களில் ஓவி யம் இடம்பெற்றிருந்தது. மேற்குச் சுவற்றில் இருந்த சிவபெரு மானின் சம்ஹார தாண்டவ ஓவியம் முற்றிலும் அழிந்து, கோடு களாக மட்டும் தற்போது காட்சி யளிக்கின்றது. வடக்குச் சுவற்றில் பார்வதி தேவியின் அழகிய வண்ண ஓவியம் மட்டும் சிதைந்த நிலையில் இன்றும் காட்சியளிக்கின்றது. மகுடம் தரித்த தலைக்கு மேல் அழகிய வண்ணக் குடை, ஒருகால் தரையில் நின்றிருக்க மற் றொரு காலை மடித்து, தலையை சாய்த்து, அழகிய அணி கலன்களுடன் ஒய்யாரமாகக் காட்சி தருகிறார் உமையம்மை.
கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது இங்த ஓவியங்கள் தென்னிந்திய, தமிழக ஓவியக்கலை மரபில் குறிப்பிடத்தகுந்த இடத் தைப் பிடித்திருப்பதாகும். 1950களில் பிரெஞ்சுப் பேராசிரியர் ழுவோ துப்ராய் அவர்களால் கண்ட றியப்பட்டு வெளியுலகிற்குத் தெரிய வந்தது. வெளிநாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களாலும், இந்திய ஆறிஞர்களாலும் பனைமலை ஓவி யம் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
சிவனின் சம்ஹார தாண்டவ ஓவியம் முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில், பார்வதி தேவியின் ஓவியமும் அந்த நிலையை நோக் கிச் சென்றுகொண்டிருப்பது வேத னைத் தரக்கூடியதாகும். ஓவியம் இடம்பெற்றுள்ள சிற்றாலயத்தின் கதவுகள் திறந்தே கிடப்பதே அழிவிற்கு முக்கிய காரணம்.
மனிதர்களின் மூச்சுக் காற்றில் கலந்துள்ள ஓருவித கிருமி ஓவியங்களை மிகவும் பாதிக்கக் கூடியதாகும். அதனால் பாரிஸ் போன்ற இடங்களில் உள்ள பழமைவாய்ந்த ஓவியங்களை பாது காக்கும் பொருட்டு அதைப் பார்வையிடுவது கூட தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களின் கலையுணர்வை உலகுக்குக் காட்டி நிற்கும் வர லாற்றுப் பெட்டகமான, பனைமலை ஓவியத்தின் எஞ்சியப் பகுதியை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT