Published : 15 Apr 2016 12:18 PM
Last Updated : 15 Apr 2016 12:18 PM
நகரமயமாக்கல் என்ற பெயரில் இயற்கைவளங்கள், கிராமங்களை அழிப்பது வளர்ச்சி என்றாகிவிட்டது. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, தட்பவெப்பம் மற்றும் உணவு கலாச்சார மாற்றத்தால் அலர்ஜி ஏற்படுகிறது. மலர்களின் மகரந்தம், செல்லப் பிராணிகள் மூலமும் அலர்ஜி உருவாகிறது.
சர்வதேச அளவில் இந்தியாவில் குப்பைக் கழிவுகள், சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆண்டு தோறும் பொதுமக்களுக்கு ஏற்படும் அலர்ஜி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால், கண், பல் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு தனி மருத்துவமனைகள் இருப்பது போல் தற்போது அலர்ஜிக்கும் தனி மருத்துவமனை திறக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை கே.கே.நகரில் முதன்முறையாக அலர்ஜி பரிசோதனை, சிகிச்சைக்கு தனி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு அலர்ஜி பாதிப்பு அதிகரித்துள்ளதாக அலர்ஜி கிளி னிக் மருத்துவர் ஜெ.பாலசுப்பிர மணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறிய தாவது: இந்தியாவில் 20 முதல் 30 சத வீதம் மக்கள் அலர்ஜியால் பாதிக்கப்படுகின்றனர். 70 சதவீதம் ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படுகிறது. 30 சதவீதம் வேறு காரணங்களால் ஏற்படுகிறது.
டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் பொது மக்களுக்கு அலர்ஜி அதிக அளவு ஏற்படுகிறது. அலர்ஜியை ஏற்படுத்து வதில் ஹவுஸ் டஸ்ட் மைட் என்ற கிருமிகள் முக்கிய பங்கு வகிக் கின்றன. இந்த கிருமிகள் வீடுகளில் மெத்தை, படுக்கை விரிப்புகள், தலையணைகளில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கின்றன. இந்த கிருமிகளின் எச்சம் குழந் தைகள், பெரியவர்களுக்கு அலர் ஜியை ஏற்படுத்துகிறது.
இந்த ஹவுஸ் டஸ்ட் மைட் கிருமிகள், முடி, தோல்களில் இருந்து வரும் எபித்திலியம் செல்களை உண்டு உயிர் வாழு கின்றன. பூக்களில் இருக்கும் மகரந்த துகள்கள் மூலமும் அலர்ஜி ஏற்படுகிறது. கரப்பான் பூச்சி, கொசு, பூனை மற்றும் நாய் ஆகியவற்றின் இறக்கைகள், ரோமங்கள் உதிர்ந்து கீழே விழுவதால் அவற்றின் மூல மும் அலர்ஜி ஏற்படுகிறது. அதனால், பூனை, நாய்களை வளர்ப்பதில் கவனம் வேண்டும். அலர்ஜியை பரப்பும் ஒவ்வாமை ஊக்கிகள் காற்று மூலம் பரவி சுவாசப்பாதை வழியாக மூக்கு, தொண்டை, மூச்சுக்குழாய், நுரையீரலில் சென்று அடைப்பை ஏற்படுத்தி சுவாச பிரச் சினைகளை ஏற்படுத்துகின்றன.
இதனால், மூக்கு அடைப்பு, அரிப்பு, மூக்கு மற்றும் கண் எரிச் சல், கண்ணில் இருந்து தண்ணீர் வடிவது, தொடர் தும்மல், சளி பிடிப்பது, தொண்டை கரகரப்பு, நுரையீல் பிரச்சினைகளை ஏற் படுத்தி கடைசியில் ஆஸ்துமாவை ஏற்படுத்துகிறது.
சில நேரங்களில் சாப்பிடும் உணவுகள் மூலம் அலர்ஜி ஏற்படு கிறது. முட்டை, வேர்க்கடலை, கோதுமை, முந்திரி, பால் மற்றும் கடல் உணவுகளை எல்லோரும் சாப்பிடுகிறோம். இதை சாப்பிடு வதால் எல்லோருக்கும் அலர்ஜி ஏற்படுவதில்லை. குறிப்பிட்ட சதவீதம் பேருக்கு இந்த உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. சாப்பிட்டவுடன் கண் எரிச்சல், தொண்டை அடைப்பு உருவாகும். வயிற்று வலி ஏற்படும். சிறிது நேரத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெ.பாலசுப்பிரமணியன்
கோடை காலத்தில் அலர்ஜி அதிகம்
மருத்துவர் பாலசுப்பிரமணியன் மேலும் கூறும்போது, ‘‘கோடை காலத்தில் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மூலம் அதிக அளவு அலர்ஜி ஏற்படுகிறது. அலர்ஜிக்கான மருத்துவ சிகிச்சை தற்காலிக நிவாரணமே. என்ன அலர்ஜி என்றும், அது எதனால் ஏற்படுகிறது என்பதையும் கண்டுபிடிப்பதே நிரந்தர நிவாரணமாகும். இதற்கு ரத்தப் பரிசோதனை, தோல் பரிசோதனை செய்து அலர்ஜியை ஏற்படுத்தும் கிருமிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதுபோல் அலர்ஜி உண்டுபண்ணும் கிருமிகளை உடலில் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அலர்ஜியைத் தடுக்கலாம். தற்போது இந்த சிகிச்சைக்கு நாக்குக்கு அடியில் வைக்கும் மாத்திரைகள் வந்துவிட்டன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT