Published : 18 Apr 2016 10:18 AM
Last Updated : 18 Apr 2016 10:18 AM
ஜப்பான் நாட்டின் அரசு நிதி நிறுவனமான ஜய்கா (JICA), நம் நாட்டில் சாலை, மேம்பாலம் கட்டுதல், ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் பணிகள், மின்உற்பத்தி, குடிநீர் சுத்திகரிப்பு திட்டம் உட்பட பல்வேறு திட்டப் பணிகளுக்கு நிதி அளித்து வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு சாலை விரிவாக் கம் மற்றும் மேம்பாலங்களை அமைக்க புதியதாக 11 திட்டங்களுக்கு அரசு ஆணை வெளியிட்டு, விரிவான திட்ட அறிக்கையை தயாரித்தது. அதன்படி, சென்னை ஈவெரா சாலை - ராஜா முத்தையா சாலை சந்திப்பில் மேம் பாலம் கட்டுதல், திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறு வழிப்பாதையாக அகலப்படுத்துதல் மற்றும் பல்வழி மேம்பாலம் கட்டுதல், திருவான்மியூர் சந்திப்பில் பல்வழி மேம்பாலம் அமைத்தல், விஜயநகரம் சந்திப்பு முதல் வேளச்சேரி விரைவு போக்குவரத்து ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஒரு ஆகாய நடைபாதை அமைத்தல், திருவொற்றியூர் - பொன்னேரி - பஞ்செட்டி சாலையில் மேம்பாலம் அமைத்தல் உட்பட மொத்தம் 11 திட்டப்பணிகள் மேற்கொள்ள ரூ.3 ஆயிரம் கோடி ஜய்கா நிறுவனத்திடம் நிதி உதவி கோரப்பட்டது. திட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதற்கு எந்த நிதி உதவியும் அளிக்கப்படாது என அந்நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால், மேற்கண்ட 11 திட்டப்பணிகள் மேற்கொள்ள புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசு நிதி மூலம் நிறைவேற்ற திட்டம்
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை போன்ற பெரிய நகரங்களில் மேம்பாலம், மெட்ரோ ரயில் போன்ற திட்டப் பணிகளுக்கு ஜய்கா நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. திட்டப் பணிகளை மேற்கொள்ள நிலம் கையகப்படுத்துவதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் சாலை மற்றும் மேம்பாலப் பணிகள் தொடங்குவதற்கே பல ஆண்டுகள் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும், இடத்துக்கு ஏற்றவாறு விலையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. சில இடங்களில் திட்ட மதிப்பைவிட, நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து இருக்கிறது.
இதற்கிடையே, நெடுஞ்சாலைத்துறை யில் 11 திட்டப்பணிகளுக்கு ரூ.3000 கோடி ஜய்கா நிறுவனத்திடம் நிதி கேட்கப்பட்டது. திட்டங்களுக்கு மட்டுமே நிதி அளிக்க தயாராகவுள்ளோம். ஆனால், திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்து வதற்கு கடன் அளிக்கப்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, நிலம் கையகப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் நிதியை எதிர்பார்த்து கொண்டி ருக்கிறோம். இதனால், திட்டங்கள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட லாம். ஆனால் திட்டங்களை கைவிடமாட்டோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT