Published : 18 Jan 2022 12:20 PM
Last Updated : 18 Jan 2022 12:20 PM
சென்னை: ராமலிங்க அடிகளார் ஜோதியான இன்று ''அணையா அடுப்பு மூலம் பட்டினி வயிறுகளின் பசியாற்றிய வடலூர் வள்ளலாரைப் போற்றுவோம்'' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவருட்பா பாடல்களை இயற்றிய ராமலிங்க சுவாமிகள், 1823-ல் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர். உயிர்களின் மேல் இரக்கம் மிகுந்து அருளாளராகத் திகழ்ந்தவர். ராமலிங்கரை ' அருட்பிரகாச வள்ளலார்' என அழைத்து மகிழ்ந்தனர் மக்கள்.
1867-ல் வடலூரில் சத்திய ஞான சபை அமைத்து பசியோடு வருபவர்களுக்கு உணவளித்தார். அவர் மறைந்த பின்னும் நூற்றாண்டுகளைக் கடந்தும் அவரது ஆதரவாளர்கள் எளிய மக்களுக்கு உணவளிக்கும் பணிகளை தொடர்ந்து செய்துவருகின்றனர். அவர் 1874-ல் தைப்பூசத் திருநாளில் அவர் ஜோதியான நாளை ஒவ்வொரு ஆண்டும் வடலூரில் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
வள்ளலாரின் நினைவைப் போற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் தளத்தில், "வாடிய பயிரைக் கண்டால் மனம் வாடும் இரக்கமும், பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும், சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகள் அவர்களின் நினைவு போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம்!" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT