Published : 17 Jan 2022 10:57 AM
Last Updated : 17 Jan 2022 10:57 AM

ஊரடங்கில் பணியாற்றிய காவலர்களுக்கு பிரியாணி வழங்கி உபசரிப்பு

ஊரடங்கின் போது பிரியாணி வழங்கி உபசரிக்கப்படும் காவலர்கள்.

கள்ளக்குறிச்சி

ஊரடங்கின் போது இரவு பகலாக ஓய்வின்றி பணியாற்றிய காவலர்களுக்கு பிரியாணி வழங்கிஉபசரித்து உற்சாகப்படுத்தி யுள்ளனர் விக்கிரவாண்டி மற்றும் கிளியனூர் காவல் ஆய்வாளர்கள்.

கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஞாயிறும் முழு ஊரடங்குகடைபிடிக்கப்படுகிறது. ஊரடங் கின் போது பாதுகாப்புப் பணிக் காக போலீஸார் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது கடந்த 14-ம் பொங்கல் தினத்திலிருந்து தொடர்ந்து 3 நாட்களாக பண்டிகை தினமாக இருப் பதால் மக்களின் நடமாட்டம் சற்று கூடுதலாக இருந்தது. இதனால், பொங்கல் பண்டிகை முதலே போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வரு கின்றனர்.

மேலும் நேற்று முழு ஊரடங்கு என்பதால் உணவகம் உள்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் பணியில் உள்ள காவலர்களுக்கு உணவு கிடைப்பதில் இடையூறு ஏற்படும் என்பதால், விக்கிரவாண்டி மற்றும் கிளியனூர் காவல் ஆய்வாளர்கள் இணைந்து தங்கள் சரகத் துக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு தங்கள் முயற்சியில் உணவு சமைத்து வழங்கினர்.

அந்த வகையில் நேற்று மதியம் சிறப்பு உணவாக சுமார் 75 காவலர்களுக்கு பிரியாணி சமைத்து அனைவருக்கும் வழங் கப்பட்டது. இதனால் காவலர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x