Published : 14 Jan 2022 05:35 PM
Last Updated : 14 Jan 2022 05:35 PM
சென்னை: பொங்கல் திருநாளில் தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தனிப்பெரும் விழாவாக தை முதல்நாளாம் இன்று பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பொங்கல் விழா முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், ''என் அன்பார்ந்த தமிழ் மக்களே, உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். எந்த பேதமுமின்றி நன்றியுணர்வு என்னும் நோக்கத்தோடு இயற்கைக்கு நன்றி செலுத்தும் திருநாள் பொங்கல் திருநாளில் தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும். உழவர்கள் மகிழ்ச்சியடையட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில், ''நன்மை பொங்கட்டும், புதுமை பெருகட்டும், அறியாமை அகலட்டும், இனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நன்னாளில் என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சிப் பொங்கட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT