Published : 14 Jan 2022 07:07 AM
Last Updated : 14 Jan 2022 07:07 AM

கோயில் வழிபாட்டு விவகாரத்தில் எங்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதா?- இந்து சமய அறநிலையத்துறை தலையிட கிராம மக்கள் கோரிக்கை

மாரியம்மன் கோயில் சிலை தொடர்பாக பூட்டை கிராமத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயி லில் ஆண்டு தோறும் தை மாதம்விமரிசையாக திருவிழா நடை பெறும். அப்போது பூட்டை கிராமத்திலிருந்து தியாகராஜபுரம் கோயிலுக்கு மாரியம்மன் சிலை எடுத்து வரப்பட்டு வழிபட்ட பின்னர் மீண்டும் தியாகராஜபுரம் எடுத்துச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2013-ம்ஆண்டு கோயில் தேர் திருப்பணிக்காக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இருப்பினும் தேர் பணிகள் முடிவ டையாத நிலையில், கோயில் சிலை பரிமாற்றம் நின்று போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்போது பூட்டை ஊராட்சி தலைவராக இருந்த கந்தசாமி, அடுத்தடுத்த ஆண்டுகளில் தியாகராஜபுரத்திற்கு சிலையை வழங்க மறுத்து வந்ததால், தியாகராஜபுரம் கிராமத்தினர் வேறு சிலை செய்து வழிபட்டு வந்துள்ளனர்.

அண்மையில் மாரியம்மன் சிலை விவகாரம் தொடர்பாக பூட்டை கிராமத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பூட்டை ஊராட்சித் தலைவர் ஜீவாகொளஞ்சி, தியாகராஜபுரம் கிராமத் திற்கு மாரியம்மன் சிலை கொண்டு செல்ல அனுமதித்துள்ளார். அதே நேரத்தில் தியாகராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சங்கரன் சிலையை தங்கள் கிராமத்திற்கு கொண்டு வர ஆர்வம் காட்டியுள்ளார்.

ஆனால். தியாகராஜபுரம் கிராம மக்களோ, நம் கிராமத்திற்கு எனதனி மாரியம்மன் சிலை செய்துஅதை வழிபட்டு வரும் நிலையில்,தற்போது திடீரென பூட்டையிலி ருந்து ஏன் மாரியம்மன் சிலை கொண்டு வர வேண்டும் என கேள்விஎழுப்பியதோடு, இவ்விஷயத்தின் உள் நோக்கம் குறித்து அறிந்து, இந்து சமய அறநிலையத் துறையினர் இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் லோகநாதனிடம் கேட்டபோது, தற்போது கரோனா தொற்றுக் காரணமாக எந்த விழாவும் நடத்தக் கூடாது என அறிவுறுத்தி, இப்பிரச்சனையை தற்காலிகமாக ஒத்தி வைத்தி ருப்பதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x