Published : 13 Jan 2022 06:19 AM
Last Updated : 13 Jan 2022 06:19 AM

‘இந்து தமிழ் திசை’, ஏபிஜே அகாடமி இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான ‘கையெழுத்துப் பயிற்சி’ - ஆன்லைனில் ஜன.24 முதல் 8 நாட்கள் நடக்கிறது

சென்னை: மாணவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக, ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் பல்வேறுசெயல்பாடுகளை இணையவழியாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன்படி, ஏபிஜே அகாடமி உடன் இணைந்து ‘கையெழுத்துப் பயிற்சி’ எனும் ஆன்லைன் நிகழ்ச்சியை ஜன.24 முதல் பிப்.1-ம்தேதி வரை (ஜன-30 - ஞாயிறுதவிர்த்து) மாலை 6.30 மணி முதல்7.30 மணி வரை நடத்த உள்ளது.

இந்தக் கையெழுத்துப் பயிற்சியை கடந்த 7 ஆண்டுகளாகமாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக பல பயிற்சிகளை வழங்கிவரும் ஏபிஜே அகாடமியின் நிறுவனரும், புகழ்பெற்ற கையெழுத்துப் பயிற்சியாளருமான தேவகிபாலாஜி வழங்க உள்ளார். இப்பயிற்சியில் 7 வயது குழந்தைகள் முதல் அனைவரும் பங்கேற்கலாம்.

இப் பயிற்சியில், சேர்த்தெழுதுதல், கையெழுத்தில் நேர்த்தியும் தெளிவும், எழுத்துகளை எழுதும்முறை ஆகியவை குறித்தும் பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்கான உள்ளடக்கம் தொடர்பான பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்படும். பெற்றோர் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். நாள்தோறும் பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் அழகான கையெழுத்து அமையும்.

இப் பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/00069 என்ற இணையதளத்தில் ரூ.885/- பதிவுக் கட்டணம்செலுத்தி, பதிவு செய்து பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9894220609 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x