Published : 13 Jan 2022 11:20 AM
Last Updated : 13 Jan 2022 11:20 AM

புதுச்சேரி: ‘லிப்ட்’ கேட்டு பைக்கில் வந்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

புதுச்சேரி

புதுச்சேரி மேல்சாத்தமங்கலம் முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த வர் கோதண்டபாணி (50).

கால்நடை மருத்துவமனையில் அட்டெண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அம்சவள்ளி (48). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அம்ச வள்ளி வில்லியனூர் சென்றுவிட்டு மங்கலத்தில் பேருந்துக்கு காத்தி ருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த தனது ஊரைச் சேர்ந்த அரசு ஊழி யரான ராமலிங்கம் (58) என்பவரிடம் ‘லிப்ட்’ கேட்டுள்ளார். இதையடுத்து, ராமலிங்கம் அம்சவள்ளியை ஏற்றிக் கொண்டு ஏம்பலம் நோக்கி வந்த நிலையில், மங்கலம் தனியார் ஸ்டோர்அருகே பின்னால் வந்த டிராக்டர், ராமலிங்கத்தின் பைக் மீது திடீரென மோதியது.

இதில் தடுமாறி கீழே விழுந்த அம்சவள்ளி மீது டிராக்டரின் சக்கரம் ஏறி இறங்கியது. உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய அம்சவள்ளியை அங்கிருந்தவர்கள் மீட்டு அரியூர் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து புதுச்சேரி மேற்கு பகுதி போக்குவரத்து போலீஸார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x