Published : 11 Jan 2022 01:40 PM
Last Updated : 11 Jan 2022 01:40 PM
விரிசலுடன் காணப்படும் மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையக் கட்டிடம் இந்து தமிழ் செய்தி எதிரொலியாக சென்னை பொறியியல் நிபுணர் குழு ஆய்வுக்குப் பின் மறுசீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கட்டமைப்பு வசதி, சுகாதாரத்துக்காக ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற பஸ்நிலையமாக மாட்டுத் தாவணி பஸ்நிலையம் திகழ்ந்தது.
காலப்போக்கில் பராமரிப்பில் மாந கராட்சி கோட்டை விட்டதால் ஐஎஸ்ஓ தரச்சான்று கைவிட்டுப்போனது. சுகா தாரமும் கேள்விக்குறியானது.
பஸ்நிலையத்தின் மேற்கூரை சீலிங் பூச்சுகள் பெயர்ந்து விழத் தொடங்கின. ஆனால், மாநகராட்சி அதைக் கண்டுகொள்ளவில்லை.
முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தது என்பதால் இந்த பஸ்நிலையத்தை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என திமுக வினர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், கடந்த வாரம் பஸ்நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் காயம் அடைந்தார்.
இதுகுறித்து இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தற்காலிகமாக பஸ்நிலையத்தில் மேற்கூரை சீலிங் பூச்சுகளைத் தட்டி விட்டு, அதைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கின.
மேலும், காவல்துறை வீட்டு வசதிக் கழக ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் குமார் தலைமையில் குழு அமைத்து பஸ் நிலையத்தைச் சீரமைக்க ஆய்வு செய்து அறிக்கை தர மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் பொறியாளர் குமார் தலைமையில் மாநகராட்சி உதவிப்பொறியாளர் காமராஜ், உதவிச் செயற்பொறியாளர் சேகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தை ஆய்வு செய்தனர்.
பஸ்நிலையக் கட்டி டத்தில் விரிசல் ஏற்பட் டுள்ள இடங்கள், சீலிங் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த இடம் ஆகியவற்றை பார்வையிட்டு அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப் படையில் திட்ட மதிப்பீடு தயார் செய்து பஸ் நிலையத்தை மறுசீரமைப்புச் செய்ய அரசுக்குக் கருத்துரு அனுப் பப்படும்.
அதேநேரத்தில் பஸ் நிலையத்தில் தேவைப்படும் இடங்களில் சிறிய அள விலான மராமத்துப்பணி தொடங்கி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT