Published : 10 Jun 2014 09:00 AM
Last Updated : 10 Jun 2014 09:00 AM

பிலிப்பைன்ஸில் குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்பு- சென்னையில் இன்று முதல் அனுமதி சேர்க்கை

பிலிப்பைன்ஸ் நாட்டில் குறைந்த கட்டணத்தில் டாக்டருக்கு படிப்பதற்கான, அனுமதி சேர்க்கை சென்னையில் ஜூன் 10, 11, 12-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்தியாவில் அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் குறைவான இடங்களே உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் மற்றும்நன்கொடை வசூலிக்கப்படுகிறது. இதனால் டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தை மாணவ, மாணவிகளால் அடைய முடியவில்லை. இந்நிலையில் குறைந்த கட்டணத்தில் உலகின் மிகச்சிறந்த மருத்துவப் பல்கலையில் மருத்துவப் படிப்பைத் தொடர லிம்ரா எஜுகேஷனல் கன்சல்டன்ஸ் நிறுவனம் வழிக்காட்டுகிறது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லிம்ரா, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தாவோ மருத்துவக் கல்லூரியின் தென்னிந்திய பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் டாக்டர் பட்டம் பெறுவதற்கு லிம்ரா உதவி செய்துள்ளது.

இந்த மருத்துவக் கல்லூரியால் வழங்கப்படும் டாக்டர் பட்டம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் அங்கீகாரம் பெற்றுள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற பிறகு, இந்தியாவில் நேஷனல் போர்டு ஆப் எக்ஸாமினேஷன்ஸ் அமைப்பினால் நடத்தப்படும் ஸ்கிரீனிங் டெஸ்ட்டில் பங்கு பெற்று தேர்ச்சி பெற வேண்டும். அதன்பின் இந்திய மெடிக்கல் கவுன்சிலில் டாக்டராக பதிவு செய்து கொள்ளலாம்.

இதையடுத்து இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டாக்டராக பணியாற்ற முடியும். லிம்ரா மூலம் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரி விடுதியில் தென்னிந்திய உணவு வகைகள் தனிப்பட்ட கவனத்துடன் தயாரித்து வழங்கப்படுகின்றன.

மருத்துவப் படிப்புக்கான நேரடி அனுமதி சேர்க்கை ஜூன் 10, 11, 12-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இது தொடர்பான விவரங்களுக்கு லிம்ரா எஜுகேஷனல் கன்சல்டன்ஸ், முகமது கனி, நிறுவன இயக்குநர், எண்.177 ராயப்பேட்டை நெடுஞ்சாலை, முதல் தளம், மைலாப்பூர், சென்னை: 600004 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9445483333, 9445783333 9884402678 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x