Published : 10 Jan 2022 07:47 AM
Last Updated : 10 Jan 2022 07:47 AM
திருவள்ளூர்: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, ஆவடியில் உள்ள சார்-கருவூல அலுவலகத்துக்கு பெயர் பலகை வைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி-பூந்தமல்லி சாலையில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் பின்புறம் சார்-கருவூல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்துக்கு ஓய்வூதியதாரர்கள், முத்திரைத்தாள்கள் விற்பனை செய்வோர் தினமும்நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
ஆனால், இந்த அலுவலகத்தின் முன்பகுதியில் பெயர் பலகை இல்லாததால், பலர் அலுவலகத்தைக்கண்டுபிடிக்க முடியாமல் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டது.
அத்துடன், அலுவலகத்துக்குச் செல்லும் வாயில் பகுதியில் இருபுறமும் செடிகள் புதர்கள் போல் வளர்ந்திருந்தன. இதனால் பாம்பு, விஷப்பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்தது. இதனால், கருவூலத்துக்கு வருபவர்கள் அச்சத்துடன் வரும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று (ஜன. 9) படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சார்-கருவூல அலுவலகத்துக்கு பெயர் பலகை வைத்ததோடு, முட்புதர்களையும் அகற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT