Published : 08 Apr 2016 08:49 AM
Last Updated : 08 Apr 2016 08:49 AM

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகள் அதிகம்

சென்னையில் பதற்றமான வாக்குச் சாவடிகள் அதிகம் கொண்ட தொகுதியாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி உள்ளது. அந்த தொகுதியில் மொத்தம் 72 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன.

சென்னை மாவட்டத்தில் 891 அமைவிடங்களில் 3 ஆயிரத்து 699 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில், 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள 70 வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டு, அங்குள்ள ஆண், பெண் வாக்கா ளர்கள் தனியாக பிரிக்கப்பட்டு 70 துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அவற்று டன் சேர்த்து, சென்னையில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 769 வாக்குச் சாவடிகளாக உயர்ந்துள்ளன.

சென்னையில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தும் விதமாக பதற்றமான வாக்குச் சாவடிகளை அடையாளம் காணும் படி மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் உத்தர விட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, அவரது தலைமை யில், சென்னை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாநகர காவல்துறை அதி காரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டங்கள் 2 முறை நடத்தப்பட்டன.

அதில், அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வகுப்பு மோதல்கள், கொலைகள், தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுவோர் வசிப்பி டங்கள், மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகள், கடந்த மக்கள வைத் தேர்தலின்போது பதற்ற மான வாக்குச் சாவடிகளாக அறிவிக்கப்பட்ட வாக்குச் சாவடி களின் தற்போதைய நிலை, முந்தைய தேர்தல்களில் மோதல்கள் ஏற்பட்ட வாக்குச் சாவடிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பதற்றமான வாக்குச் சாவடிகள் இறுதி செய்யப்பட்டு, சென்னையில் மொத்தம் 418 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று மாவட்ட தேர்தல் நிர்வாகம், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு கோப்புகளை அனுப்பியுள்ளது.

அதில், 72 பதற்றமான வாக்குச் சாவடிகளுடன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி முதலிடத்தில் உள்ளது. 40 பதற்றமான வாக்குச் சாவடிகளுடன் ராயபுரம் தொகுதி 2-ம் இடத்திலும், 39 பதற்றமான வாக்குச் சாவடிகளுடன் தியாகராயநகர் தொகுதி 3-ம் இடத்திலும் உள்ளன.

பதற்றமான வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அடையாளம் காணப்பட்டுள்ள பதற்றமான வாக்குச் சாவடி களில் துணை ராணுவப் படை யினர் நிறுத்தப்படுவர். அங்கு வெப் கேமரா பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறை மூலமாக நேரடியாக கண்காணிக்கப்படும். அங்கு நுண் மேற்பார்வை யாளர்களும் நியமிக்கப்படுவர். மேலும் அந்த வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக் களிப்பதற்கான அனைத்து ஏற்பாடு களும் செய்யப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x