Published : 20 Apr 2016 08:13 AM
Last Updated : 20 Apr 2016 08:13 AM
ஓட்டல்களில் வசூலிக்கப்படும் சேவை வரிக்கும், சேவை கட்டணத் துக்குமான வித்தியாசம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தேவைப் படுகிறது.
ஓட்டல்களுக்குச் சென்று நாம் சாப்பிட்ட பிறகு அளிக்கப்படும் ரசீது களில் பலவிதமான கட்டணங்களை வசூலிக்கின்றனர். குறிப்பாக, ஏ.சி. வசதி கொண்ட ஓட்டல்கள் விதிக் கும் வரிகளில், மக்களுக்கு ஏராள மான குழப்பங்கள் உள்ளன.
எனினும், சாப்பிட்டு முடித்து விட்டு அவர்கள் அளிக்கும் ரசீதில் உள்ள கட்டணத்தை மக்கள் செலுத்திவிட்டு வருகின்றனர். நம்மிடம் அளிக்கப்படும் பில்லில் சேவை வரி (சர்வீஸ் டாக்ஸ்) மற்றும் வாட் வரி குறிப்பிடப்பட்டிருக்கும். இது தவிர, சேவை கட்டணத்தையும் (சர்வீஸ் சார்ஜ்) சில ஓட்டல்களில் வசூலிக்கின்றனர்.
இதில், வாடிக்கையாளரிட மிருந்து வசூலிக்கப்படும் சேவை வரி மற்றும் வாட் வரி ஆகியவை மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத் தப்படுகிறது. சேவை கட்டணம் என்பது முழுக்க முழுக்க அந்த ஓட்டலுக்குத்தான் போய்ச் சேரும்.
சேவை கட்டணத்தை நாம் செலுத்தினால், பரிமாறிய சர்வருக்கு டிப்ஸ் தர வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அவருக்கான டிப்ஸ் அல்லது சர்வீஸ் சார்ஜ் ஏற்கெனவே நமது பில்லில் சேர்க்கப்பட்டிருக்கும்.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு தனியார் ஓட்டலுக்கு உணவருந்த சென்றுள்ளனர். அங்கு, உணவுப் பொருள் விலைப் பட்டியலின் (மெனு கார்டு) அடிப்படையில் உணவு களை ஆர்டர் செய்துள்ளனர்.
உணவு உண்ட பிறகு, கொடுக் கப்பட்ட ரசீதில் உணவுக்கான கட்டணம், சேவை வரி தவிர்த்து சேவை கட்டணம் எனக்கூறி ரூ.48.50 குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தியாகராஜன், சேவை கட்டணம் என்ற பெயரில் அரசு எந்தக் கட்டணத் தையும் வசூலிக்கச் சொல்ல வில்லை என ஓட்டல் மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஓட்டல் மேலாளர், சேவை கட்டணத்தோடு ரசீதில் குறிப்பிட் டுள்ள தொகையை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று கூறி யுள்ளார். வேறு வழியில்லாமல் அந்தத் தொகையை செலுத்திய தியாகராஜன், சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சட்டவிரோதம்
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தியாகராஜனிடமிருந்து சேவை கட்டணம் வசூலித்தது சட்டவிரோதம். எனவே, சேவை கட்டணமாக அவர் செலுத்திய ரூ.48.50-ஐ திருப்பி அளிக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10,000 மற்றும் வழக்குச் செலவாக ரூ.2,500 வழங்க வேண்டும் என தனியார் ஓட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
ஓட்டல்களில் வசூலிக்கப்படும் வரிகள் குறித்து தமிழ்நாடு ஓட்டல் கள் சங்கத்தின் செயலாளர் சீனிவா சன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சிறிய, நடுத்தர ஓட்டல்களில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படு வதில்லை. பெரிய ஆடம்பர ஓட்டல் களில் சேவை கட்டணம் வசூலிக் கின்றனர். அவ்வாறு, சேவை கட்ட ணம் வசூலித்தால் முன்கூட்டியே வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும். மெனு கார்டிலும் சேவை கட்டணம் குறித்து குறிப்பிட்டிருக்க வேண்டும். அவ்வாறு தெரியப் படுத்தாமல் சேவை கட்டணம் வசூலிப்பது தவறு.
மத்திய அரசு விதிப்பது சேவை வரியாகும். ஏ.சி. வசதி கொண்ட ஓட்டல்களில் மட்டும், மொத்த பில் தொகையில் 40 சதவீத தொகைக்கு சேவை வரி விதிக்கப்படுகிறது.
மாநிலத்தில் விற்கப்படும் பொருட்கள் மீது மாநில அரசு வாட் வரி விதிக்கிறது. சாதாரண ஓட்டல்களில் மொத்த பில் தொகை யில் 2 சதவீதமும், நட்சத்திர ஓட்டல் களைப் பொருத்தவரை மொத்த பில் தொகையில் 14.5 சதவீத தொகை வாட் வரியாக வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. வசதி இல்லாத ஓட்டல்களில் சாப்பிட்டால் வாட் வரி மட்டும் வசூலிக்கப்படும். ஏ.சி. ஓட்டல்களில் சேவை வரி, வாட் வரி ஆகிய இரண் டும் வசூலிக்கப்படும் என்றார்.
கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணன் கூறும்போது, “பில்லில் குறிப்பிட் டுள்ள மொத்த தொகையை பார்த்து மக்கள் கட்டணத்தை செலுத்து கின்றனர். ஓட்டல்களில் வசூலிக்கப் படும் வரிகள், இதர கட்டணங்கள் குறித்து பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT