Published : 26 Apr 2016 12:00 PM
Last Updated : 26 Apr 2016 12:00 PM
கோடை வெயில் சுட்டெரிப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து தென் மாவட்ட சுற்றுலா நகரங்கள் வெறிச்சோடி காணப்படு கின்றன.
கோடை காலத்தில் மக்கள் குளு மையான பிரதேசங்கள், சுற்றுலா நகரங்களுக்கு செல்வார்கள். அந் நகரங்களில் சுற்றுலாப் பயணி கள் வருகை அதிகரித்து ஹோட் டல்களில் அறைகள் எப்போதும் நிரம்பியே காணப்படும். இதனால், சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் நடத்தும் வியாபாரிகள், தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
கடந்த ஆண்டைவிட அதிகம்
இந்நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள தால் பெற்றோர் குழந்தைகளை சுற்றுலா நகரங்களுக்கு அழைத்துச் செல்ல விரும்பினாலும் கோடை வெயில் கடந்த ஆண்டைவிட அதிகரித்து இருப்பதால் சுற்றுலா நகரங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
நேற்று பிற்பகல் நிலவரப்படி திருச்சியில் 40 டிகிரி செல்சியஸ், மதுரை- 39, திருநெல்வேலி- 38, சென்னை- 38, கிருஷ்ணகிரி- 38, சேலம்- 39, கோவை- 38 என வெயிலின் அளவு பதிவானது. காற்று 16 கி.மீ. வேகத்தில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வீசியது. காற்றில் உள்ள ஈரப்பதம் 78 முதல் 63 வரை இருந்தது. அதனால், இந்த நகரங்களில் வெப்பம், அனல் காற்று அதிகரித்துள்ளது.
அனல் காற்றால் அவதி
பகலில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு மக்களை வெயில் வாட்டி எடுக்கிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சாலைகளில் பகலில் அனல் காற்று வீசுகிறது. இரவில் புழுக்கத்தால் மக்கள் தூங்க முடியவில்லை. சாலையோரங்களில் பழச்சாறு, தர்ப்பூசணி, குளிர்பானக் கடைகள், இளநீர் கடைகள், கூழ் விற்பனைக் கடைகள் அதிகரித்துள்ளன.
கடந்த காலங்களில் கோடை காலத்தில் வெயிலில் இருந்து தப் பிக்க மக்கள் குளிர் பிரதேசங் களுக்கு சென்றார்கள். தற்போது ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட குளிர் பிரதேசங்களிலும், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, குற்றாலம், தஞ்சாவூர் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து இந்த நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பாகிஸ்தான் மற்றும் வடமாநிலங்களில் ஏற்பட்ட அதீத மழையின் காரணமாக வறண்ட காற்று அதிக அளவு வடக்கு நோக்கி வீசுகிறது. அத னால், தற்போது அனல் காற்று வீசுகிறது. மேகங்களை செறிவூட்ட வேண்டிய நீராவியின் அளவும் குறைவாக இருக்கிறது. இந்த தட்பவெப்ப நிலை உடனடியாக மாறக்கூடியது. அதிகப்படியான கோடை மழைக்கும் வாய்ப்பு உள்ளது” என்றார்.
கடந்த காலங்களில் கோடை காலத்தில் மக்கள் குளிர் பிரதேசங்களுக்கு சென்றார்கள். தற்போது ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட குளிர் பிரதேசங்களிலும், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, குற்றாலம், தஞ்சாவூர் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT