Published : 07 Mar 2016 04:20 PM
Last Updated : 07 Mar 2016 04:20 PM

நாகர்கோவிலில் அழிந்துவரும் நீராதாரங்களைக் காக்க தன்னார்வ அமைப்பு முயற்சி

நாகர்கோவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு நீர்நிலைகளுக்கு பெயர் போன நகராமாக திகழ்ந்தது. இந்த நகரில் 60-க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்று 55-க்கும் மேற்பட்ட குளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய குளங்களும் அழிவின் விளிம்பில் உள்ளன.

நீராதாரங்களின் அழிவுக்கு முக்கிய காரணங்கள் ஆக்கிரமிப்பு, கழிவுநீர் ஓடைகளை திசை திருப்புவது, திடக்கழிவுகளை கொட்டுவது, குளத்துக்குள் வீடு கட்டுவது உள்ளிட்டவைதான். இந்த சட்டவிரோதச் செயல்களுக்கு சில அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் ஆதரவு தருகின்றனர் என இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு காலத்தில் நாகர்கோவிலின் சுற்றுப்புறச் சூழல் மிக அழகாக இருந்தது. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தில் நாகர்கோவிலை தங்களது கோடை கால தலைநகராக தேர்ந்தெடுத்து அரண்மனைகள் கட்டப்பட்டு வாழ்ந்தார்கள்.

மக்கள் தண்ணீர் பஞ்சம் இன்றி வாழ்ந்தார்கள். ஆனால் இன்று நாகர்கோவிலின் சில பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பருவமழை பெய்து 2மாதம் கூட முடியவில்லை. ஆனால் தண்ணீர் பஞ்சம் தொடங்கிவிட்டது.

எனவே, நீராதாரங்களை பாது காப்பதற்கான நடவடிக்கைள், எதிர் கால சந்ததிகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ற எண் ணத்துடன் களத்தில் இறங்கி யுள்ளது இயற்கை பாதுகாப்பு அறக் கட்டளை.

இது குறித்து இயற்கை பாது காப்பு அறக்கட்டளைத் தலைவரும், மத்திய அரசின் ஓய்வுபெற்ற முதுநிலை விஞ்ஞானியுமான லால் மோகன் கூறியதாவது:

மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் நமது நீர்நிலைகளை பாதுகாக்க தவறிவிட்டனர்.

குளங்களில் திடக்கழிவுகள் உள்ளிட்ட பொருட்களை கொட்டு வதால், குப்பைமேடாக மாறி மாசடைகின்றன. தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழல் உருவா கிறது.

குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர், உப்புத்தண்ணீராக மாறிக்கொண்டி ருக்கிறது.

முக்கூடல் குடிதண்ணீர் நாகர் கோவிலின் 3 லட்சம் மக்களுக்கு போதாது. எனவே, ஏற்கெனவே அருகில் இருக்கும் குடிநீர் ஆதா ரங்களான குளங்களையும், ஆறு களையும் சீரமைக்க வேண் டும்.

நாகர்கோவிலில் உள்ள செம்மாங்குளம், சுப்பையார் குளம், பெருவிளை குளம், புத்தேரி குளம் முதலிய குளங்களை சீரமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக ஆளுர் பஞ்சாயத் தின் எல்லைக்கு உட்பட்ட பெரு விளை குளத்தை திங்கள்கிழமை (இன்று) முதல் சீரமைக்க உள் ளோம் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x