Last Updated : 06 Jan, 2022 10:01 AM

 

Published : 06 Jan 2022 10:01 AM
Last Updated : 06 Jan 2022 10:01 AM

திருச்சி மாநகராட்சியில் புதிதாக துணை ஆணையர் பதவி உருவாக்கம்

திருச்சி

திருச்சி மாநகராட்சியில் முதல் முறையாக துணை ஆணையர் பதவியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் ஆணையர் தலைமையில் நகரப் பொறியாளர், நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள்(கிழக்கு) (மேற்கு) மற்றும் 4 கோட்டங்கள், வருவாய், பணியாளர், கணக்கு ஆகியவற்றுக்கென தனித்தனியே உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில், ரங்கம், அரியமங்கலம் ஆகிய கோட்டங்களுக்கு வருவாய்த் துறையில் இருந்தும், கோ-அபிஷேகபுரம் கோட்டத்துக்கு நகராட்சியில் இருந்தும், பொன்மலைக் கோட்டத்துக்கு மாநகராட்சியில் இருந்தும் உதவி ஆணையர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், திருச்சி மாநகராட்சியில் புதிதாக துணை ஆணையர் பதவியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு மாநகராட்சி பொன்மலை உதவி ஆணையராக பணியாற்றி வந்த எம்.தயாநிதி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணை ஆணையர் பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவருக்கான பணிகள், அதிகாரங்கள் குறித்து விரைவில் அறிவிப்பாணை வெளியாகும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியது: பெருநகர மாநகராட்சிகளில் துணை ஆணையர் பதவிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ளவர்கள் பணியமர்த்தப்படுவர். 2019-ல் வெள்ளி விழாவைக் கடந்த திருச்சி மாநகராட்சியில் தற்போது புதிதாக துணை ஆணையர் பதவியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பொன்மலைக் கோட்ட உதவி ஆணையராக இருந்த எம்.தயாநிதிக்கு கடந்த வாரம் துணை ஆணையர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி எல்லை 65 வார்டுகளில் இருந்து 100 ஆக உயர்த்தப்படவுள்ளதால், சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் உள்ளதுபோல நிர்வாக வசதிக்காக இந்த பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x