Published : 05 Jan 2022 10:59 AM
Last Updated : 05 Jan 2022 10:59 AM

‘குட் டச்’, ‘பேட் டச்’சை அறியும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி: விழுப்புரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

விழுப்புரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பொன்முடி, மஸ்தான் மற்றும் ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம், கடலூர், திருவண்ணா மலை, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களை உள்ள டக்கிய விழுப்புரம் மண்டலத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக் காக செயல்படுத்தப்பட்டு வரும்கற்றல், கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாகஆய்வுக்கூட்டம் நேற்று மாலைவிழுப்புரம் ஆட்சியர் அலுவல கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன் முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

இருக்கின்ற நிதி சுமையில் ரூ.32,590 கோடியை பள்ளிக்கல் வித்துறைக்காக முதல்வர் ஒதுக்கி யிருக்கிறார். அதற்கு ஏற்றாற்போல் நம்முடைய உழைப்பு இருந்தாக வேண்டும். கடந்த சில மாதங்களாக இரு விஷயங்கள் முக்கிய பிரச்சினையாக பேசப்படுகிறது. ஒன்றுபாலியல் தொல்லை, மற்றொன்று மோசமான பள்ளி கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்பது. விழுப்பு ரம் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் 539 பள்ளி கட்டிடங்களில் ஏறத்தாழ 501 பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் நமது துறையில் கட்டுப்பாட்டில் 48 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. அந்த பள்ளிகளில் என்னென்ன தேவை, எதை செய்ய வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் அக்கறையோடு செயல்பட வேண் டும். மோசமான நிலையில் இருக் கும் பள்ளி கட்டிடங்கள் குறித்து உடனடியாக அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்திற்காக 1 லட்சத்து 70 ஆயிரம்மையங்கள் நமக்கு தேவைப்படு கின்றன. தற்போது 80 ஆயிரம் மையங்கள் தயாரான நிலையில் கல்வி கற்றுக்கொடுத்து வருகிறோம். இன்னும் ஓரிரு மாதங்க ளில் 1 லட்சத்து 70 ஆயிரம் மையங் களும் தயார் செய்யப்பட்டு அப் பணி முழுமை பெறும்.

பாலியல் தொல்லை தடுப்பு குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளிலும் பெயர் பலகை வைத்து அதில் 1098 என்ற எண்ணைஎழுதி வைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும். சில பின்தங்கிய கிராம பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை குறை வாக உள்ளது. சேர்க்கையை அதி கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில்சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, ஆட்சியர் மோகன், விஷ்ணுபிரசாத் எம்.பி., எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார், சரவ ணன், ஜோதி, கிரி, பாலாஜி மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, “வகுப்பறையில் உள்ள மின் சாதனங்கள் சரியான முறையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். மாணவர்களுக்கு எவ்வித பாதிப் பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். பள்ளி மாணவர்களுக்கு தனி பேருந்து வசதிகள் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாகும். 48 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதை அமல்படுத்த வேண்டும் என்றால் 40 ஆயிரம் பேருந்துகள் இயக்க வேண்டும். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்து விவாதிக்கப்படும். 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்பு மே மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறும். பாலியல் கல்வி குறித்து பள்ளி அளவில் தனிப்பாடம் கொண்டு வரப்படும். ‘குட் டச்’, ‘பேட் டச்’ குறித்து மாணவிகள் அறியும் வகையில் இந்த பாலியல் கல்வி இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x