Published : 20 Mar 2016 10:18 AM
Last Updated : 20 Mar 2016 10:18 AM
அதிமுக சார்பில் விருகம்பாக்கம், மதுரவாயல், திருப்பத்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்துவிட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கிறார் நடிகர் சிங்கமுத்து. ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி:
இந்தத் தேர்தலில் நிறைய பேர் முதல்வர் போட்டியில் களமிறங்கி இருக்கிறார்களே?
கதைகளில் ஒரு சிங்கத்தை முட்டித் தள்ளலாம் என்று 10 மாடுகள் ஒன்று சேரும். ஆனால், இங்கு 10 மாடுகளும் தனித் தனியாக முட்டி பேர் வாங்குவோம் என்று நினைக்கின்றன. சிங் கத்தை தனித்தனியாக முட்ட முடியுமா? தேர்தல் வேகத்தில் பிதற்றுகிறார்கள். தோல்வி அடைந்த பிறகு மக்களின் முதல் வர் ‘அம்மா’தான் என்று புரிந்து கொண்டு அமைதியாகி விடு வார்கள்.
மக்களுக்கு இலவசங்கள் அள்ளிக் கொடுத்து ஜெயிக்க நினைக்கிறது அதிமுக என் கிறார்களே?
ஏழை மக்களே இருக்கக்கூடாது என்று அம்மா நினைக்கிறார். பள்ளிப் படிப்பு முதல் கல்லூரி படிப்புவரை இலவசம். திருமணத்துக்கு தங்கம் கொடுக் கிறார். ஆடு, மாடுகள் ஏழை களின் வாழ்வாதாரத்துகு வழிவகுக்கின்றன. மிக்ஸி, கிரைண்டர்கள் ஏழை பெண் களின் வீட்டு வேலைகளை சுலபமாக்குகின்றன. இவை எல்லாம் அம்மாவின் சுயநலமற்ற இலவசங்கள். கருணாநிதி போன்று தனது குடும்பத்து கேபிள் தொழிலை பெருக்கிக்கொள்ள இலவச டிவி கொடுக்கவில்லை.
எங்களை தலைமையாக ஏற்றுக் கொள்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்று தேமுதிக அறிவித்திருக்கிறதே?
விஜயகாந்த் இன்னும் சினிமாவில் இருந்தே வெளியே வரவில்லை. கட்சி ஆரம்பித்த 10 ஆண்டுகளில் அவர் மக்கள் பணி என்று எதைச் செய்தார்? அவருடைய எம்எல்ஏக்களும் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், முதல்வர் ஆசை மட்டும் விஜயகாந் துக்கு இருக்கிறது. அது நடக் காது. முதலில் அவர் பேசுவது அவருக்கே புரியுமா என்று கேளுங்கள்.
ஆனால், விஜயகாந்த் என்ன செய்யப் போகிறார் என்கிற ஆர்வம்தானே மக்களிடம் இப்போது அதிகரித்திருக் கிறது?
அவருக்கு வரும் கூட்டத்தை வைத்து கணக்கு போடக்கூடாது. பொதுக்கூட்டத்துக்கு வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறும் என்று அவர் நினைக்கிறார். சினி மாவில் காமெடி படம் என்றால் கூட்டம் கூடும். அதுபோலத்தான் விஜயகாந்த் பேசுவது செம காமெடியா இருக்கும் என்று மக்கள் போகிறார்கள்.
திமுகவின் தேர்தல் விளம் பர யுக்தியை எப்படி பார்க்கி றீர்கள்?
‘என்னய்யா இப்படி பண்றீங்க ளேய்யா’ என்று எங்களுக்கு சொல்லத் தெரியாதா. அதெல் லாம் ஒரு யுக்தியே அல்ல. ஸ்டா லினுக்கு முதல்வராகிவிட வேண் டும் என்று ஆசை. ஆனால், வெறும் ஆசையை மட்டும் வைத் துக்கொண்டு என்ன செய்வது?
ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிக்கிறாரே குஷ்பு?
பேச முடியும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக் கூடாது. எங்கள் அம்மா கொள்கை பரப்புச் செயலாளராக வந்து கடுமையாக உழைத்து முதல்வர் நிலைமைக்கு வந்திருக்கிறார். குஷ்புவும், நக்மாவும் இந்த நாட்டை ஆண்டு விடுவார்களா? கண்ணாடி பொம்மைகளை வைத்து ஆட்சி செய்ய முடியாது.
கடந்த தேர்தலில் திமுக வுக்கு வாக்கு சேகரித்த வடி வேலு, இந்த தேர்தலில் ஒதுங்கி விட்டாரே?
தன்னை காமெடியனாககூட இனிமேல் ஏற்றுக்கொள்ள மாட் டார்கள் என்று அவர் நினைத் திருக்கலாம். காமெடியின் உச்சத்துக்கு அவரை மக்கள் கொண்டு போனார்கள். ஆனால், உச்சத்தில் இருந்த அதிமுகவை தவறாக பேசியதால் ‘இவன் காமெடியன் அல்ல, வில்லன்’ என்று மக்கள் ஒதுக்கிவிட்டார்கள். இவர் வலது காலை எடுத்து வைத்தால் வெளங்காது என்றுகூட அனைவரும் நினைத் திருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT