Published : 15 Mar 2016 12:03 PM
Last Updated : 15 Mar 2016 12:03 PM
உடுமலைப்பேட்டை இளைஞர் கொலையை, பாமக வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் பாமக பொதுக்கூட்டம் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி வந்துள்ள ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, "உடுமலைப்பேட்டை இளைஞர் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன். காட்டுமிராண்டித்தனமான அனைத்து கொலைகளையும் பாமக கண்டிக்கிறது. காதல் திருமணங்களுக்கு பாமக எதிரி அல்ல. நானே தலைமையேற்று பல்வேறு காதல், கலப்பு திருமணங்களை செய்து வைத்திருக்கிறேன். பட்டப்பகலில் ஒரு படுகொலை சம்பவம் நடந்திருப்பது தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதையே காட்டுகிறது" என்றார்.
முன்னதாக, நேற்று (திங்கள்கிழமை) வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் உடுமலைப்பேட்டை சம்பவம் குறித்த கேள்வியை ராமதாஸ் புறக்கணித்துச் சென்றார். விரிவான செய்திக்கு > | தலித் இளைஞர் படுகொலை: ராமதாஸுக்கு முக்கியச் செய்தி அல்ல? |
இச்சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், உடுமலைப்பேட்டை தலித் இளைஞர் கொலையை பாமக வன்மையாக கண்டிப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
நடந்தது என்ன?
உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி வேலுச்சாமியின் மகன் சங்கர்(22). பொறியியல் மாணவரான இவர், 8 மாதங்களுக்கு முன் கவுசல்யா(19) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இருவரும் வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டார் தரப்பில் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்துள்ளது.
அவ்வப்போது பேச்சுவார்த்தை மூலம் பெண்ணை திரும்ப அழைத்துச் செல்ல பெண்வீட்டார் முயன்றனராம். இது பலனளிக்காமல் போன நிலையில், நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சங்கரும் கவுசல்யாவும் கடைக்குச் சென்று திரும்பும்போது, ஒரு கும்பல், மத்திய பேருந்து நிலையம் முன்பாக இருவரையும் சரமாரியாக வெட்டியது. அதில், சங்கர் உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT