Published : 01 Jan 2022 10:18 AM
Last Updated : 01 Jan 2022 10:18 AM
மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் ரூ.119 கோடியில் கட்டப்படும் பிரம்மாண்ட வணிக வளாகம் 462 கடைகளுடன் மூன்றடுக்கு மாடியில் அமைகிறது. இந்தக் கட்டிடம் விரைவில் திறப்புவிழா காண இருக்கிறது.
மதுரை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல் வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில் பெரியார் பேருந்து நிலையம், சுற்றுலா தகவல் மையம், ஜான்சிராணி பூங்கா, குன்னத்தூர் சத்திரம் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பெரி யார் பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் ரூ.119.56 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகக் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மூன்றடுக்கு மாடிகளில் 462 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இவ்வளாகத்தில் தரைத்தளத்துக்குக் கீழ், முதல் தளத்தில் 371 நான்கு சக்கர வாகனங்கள், தரைத் தளத்துக்குக் கீழ் 2-வது தளத்தில் சுமார் 4,865 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், மின்தூக்கி வசதி, சாய்வுதளம், நடைபாதை, மின்விளக்குகள் உள் ளிட்ட பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் கா.ப..கார்த்திகேயன் ஆய்வுசெய்து எஞ்சியுள்ள கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நகரப் பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் பாஸ் கரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் மற்றும் உதவிப் பொறியாளர்கள் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT