Published : 16 Jun 2014 10:02 AM
Last Updated : 16 Jun 2014 10:02 AM

வீட்டு வேலை செய்வோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க தொழிலாளர் அமைப்புகள் கோரிக்கை

பேரப் பிள்ளைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு கடற்கரை யோரம் இளைப்பார வேண்டிய தன்னுடைய 64 வயதில் தங்கம் இன்று குறைந்த சம்பளத்துக்கு வீட்டு வேலை செய்து வருகிறார். 54 வயதில் அவர் வீட்டு வேலை தொழிலைத் தொடங்கியபோது, அவருக்குக் கிடைத்த சம்பளம் ரூ. 200 மட்டுமே. அதே வீட்டில் 10 ஆண்டுகள் ஆன பின்பும் மாதம் ரூ.500 சம்பளம் பெற்று வரு கிறார். காலை 6 மணிக்குக் கோலம் போடுவதில் இருந்து துணி துவைத்து, பாத்திரம் கழுவி வைப் பதில் இருந்து அவரின் வேலை தொடர்கிறது.

பெற்ற மகன் கைவிட்டதால் வாடகை வீட்டில் வசிக்கிறார் தங் கம்மா. 5 வீடுகளில் வேலை செய்து கிடைக்கும் ரூ.3 ஆயிரத்தில் வீட்டு வாடகைக்குப் போக, மீத முள்ள பணமும் அரசாங்கம் தரும் முதியோர் தொகை 1,000 ரூபாயும் தான் செல்லம்மாவின் ஒரு மாதச் செலவுக்கானது.

இவரைப் போலவே, தாங்கள் செய்யும் வேலைகேற்ற ஊதியம் கிடைக்காமல் பல தங்கம்மாக்கள் இந்த நாட்டில் உள்ளனர். நாட்டின் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் படி சுமார் 4.2 மில்லியன் லட்சம் பேர் வீட்டு வேலை தொழில் ஈடுபட்டுள் ளனர். ஆனால், வீட்டு வேலை தொழி லாளர்கள் பற்றிய முறையான கணக்கெடுப்பு என்பது இன்றுவரை அரசிடம் இல்லவே இல்லை. நிறைவேற்றப்படாமல் உள்ள தொழி லாளர்களின் கோரிக்கை:

ஜெனிவாவில் கடந்த 2011-ம் ஆண்டு சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) 100- வது ஆண்டு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வீட்டு வேலை தொழி லாளர்களின் உரிமைகுறித்த மிக முக்கியமான 189-வது தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தில் வீட்டு வேலைத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் கண்ணிய மாக நடத்தப்பட வேண்டும். குறைந்த பட்சம் ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். இந்தத் தீர்மானத்தை அனைத்து நாடுகளும் ஏற் றுக்கொண்டு செயல்படுத்த வேண் டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இந்தப் பரிந்துரைக்கு ஆதரவாக இந்திய அரசு இந்தத் தீர்மானத்தில் கையெழுத்துப் போடாமல் ஆண்டு கணக்கில் காலம் தாழ்த்திக்கொண்டு வருகிறது. நாடாளுமன்றத்திலும் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான தீர்மானம் நிறைவேற்றப்படாமலே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வீட்டு வேலை தொழிலாளர்கள் நிலைமை:

(ஐ. எல். ஒ) வின் தீர்மானத்துக்குப் பிறகு தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வீட்டு வேலை தொழி லாளர்களுக்காக ஒரு குழு அமைக் கப்பட்டது. அந்தக் குழுவில் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்சம் ரூ.30 வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையின் மீது தமிழக முதல மைச்சர் கவனம் செலுத்தாததால் குறைந்தபட்ச ஊதியம் என்பது கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது 16 முறைசாரா தொழிலாளர் நலவாரியங்கள் இருந் தன. தற்போது அஇஅதிமுக ஆட்சி அமைத்த பின்னர் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியங்கள் மட்டும் செயல் படுகின்றது. இதனால் வீட்டு வேலை தொழிலாளர்களுக்காக அமைக் கப்பட்ட நலவாரியம் இருந்தும் செயல்படாத நிலைதான்.

இதுகுறித்து வீட்டுவேலை தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) மாநிலப் பொதுச் செயலாளர் லதா கூறும்போது, '’ தமிழகத் தில் மட்டும் 20 லட்சம் வீட்டு வேலை தொழிலாளர்கள் உள்ள னர். அவர்களுக்காக அமைக்கப் பட்ட நலவாரியம் தற்போது செயல் படாமல் உள்ளது. இதனால் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு ஏற்பாடும் பிரச்சினைகள்குறித்து முறையாக அரசு தரப்பில் பேசுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே, வீட்டு வேலை தொழிலாளர்களின் உரி மைகள் கிடைப்பதற்கு முத்தரப்பு குழு அமைக்க வேண்டும்'’ என்றார்.

இந்த நாளின் நோக்கம்

இந்த ஆண்டு அனுசரிக்கப்படும் சர்வதேச வீட்டு வேலை தொழி லாளர்கள் தினத்தின் முக்கிய நோக்கம் ‘வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்; அவர்களின் வேலையை தொழிலாகக் கருதப் பட வேண்டும்’ என்பதாகும்.

ஐ. எல். ஓ தீர்மானத்தில் இந்தியா கையெழுத்து போட வேண்டும்; வீட்டுத் தொழிலாளர் களுடைய ஊதியப் பரிந் துரையை தமிழகஅரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வீட்டு வேலை தொழிலாளர் களுக்காகப் போராடிக் கொண்டு இருக்கும் சங்கங்களின் உரத்தக் குரலாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x