Last Updated : 31 Dec, 2021 10:15 AM

 

Published : 31 Dec 2021 10:15 AM
Last Updated : 31 Dec 2021 10:15 AM

கோவை வனக்கோட்டத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் - உணவு தேடி வனத்தைவிட்டு அதிகம் வெளியேறிய யானைகள்

கோவை

கோவை வனக்கோட்டத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களைவிட நவம்பர், டிசம்பர் மாதங்களில் யானைகள் வனத்தைவிட்டு அதிகம் வெளியேறியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், கோவை, காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு தினந்தோறும் யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி பயிர்களை உட்கொள்வது, யானை-மனித மோதல் சம்பவம் நடப்பது தொடர் பாக வனத்துறையின் எல்லையோர இரவு ரோந்து குழுவினர் தகவல் சேகரித்து வருகின்றனர்.

எந்தெந்த மாதங்களில் யானைகள் அதிக அளவு வனத்தைவிட்டு வெளியேறுகின் றன, எந்தெந்த யானைகள் பயிர் களை அதிகம் சேதப்படுத்துகின்றன என்பது குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களைவிட நவம்பர், டிசம்பர் மாதங்களில் யானைகள் வனத்தைவிட்டு அதிகம் வெளியேறியுள்ளன.

இதுதொடர்பாக வனத்துறை யினர் கூறியதாவது: கடந்த செப்டம்பர் மாதம் 159 முறை, அக்டோபரில் 250, நவம்பரில் 271, டிசம்பரில் 296 முறை (28-ம் தேதி வரை) என மொத்தம் 976 முறை யானைகள் வனத்தைவிட்டு வெளியேறியுள்ளன. இதில், ஒற்றை ஆண் யானைகளே வனத்தைவிட்டு அதிகம் வெளியே வந்துள்ளன. கடந்த 4 மாதங்களில் ஒற்றை ஆண் யானைகள் மொத்தம் 510 முறையும், பெண் யானைகள் குழுவாக 289 முறையும், ஆண் யானைகள் குழுவாக 161 முறையும், குட்டியுடன் உள்ள பெண் யானை 13 முறையும், பெண் யானை தனியாக 3 முறையும் வனத்தைவிட்டு வெளியே வந்துள்ளன.

காரணங்கள் என்ன?

செப்டம்பர், அக்டோபர் மாதங்களைவிட நவம்பர், டிசம்பர் மாதங்களில் பயிர்கள் செழிப்பாகவும், நீர் நிலைகள் நிரம்பி உள்ளபோதும் யானைகள் அதிகமுறை வனத்தைவிட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்கு உணவு தேடி வந்துள்ளன.

3 விதமான ஆண் யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி விவசாய நிலத்துக்கு வருகின்றன. கூட்டத்திலிருந்து சண்டை யிட்டுக்கொண்டு தனித்து வந்து, தனக்குத் தேவையான உணவுக்காக பயிர்களை நோக்கி வரும் யானைகள். உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ, குட்டிகளுடன் இருக்கும் பெண் யானைகளால் வெகுதூரம் உணவுக்காக செல்ல முடியாவிட்டாலோ, உடனிருக்கும் ஆண் யானைகள் தனது குடும்பத்துக்காக பயிர்களை நோக்கி இரவு நேரங்களில் வருகின்றன.

குட்டிகளுக்கு பாலூட்ட வேண்டி யுள்ளதால் நீண்ட தொலைவு பயணிக்க முடியாமலும், ஒரே இடத்தில் அதிகளவு உணவு கிடைக்கும் என்பதாலும் வேறு வழியின்றி கட்டாயமாக பயிர்களை நோக்கி குட்டிகளுடன் உள்ள பெண்யானைகள் வருகின்றன. பெரும்பாலும் பெண் யானை தனியாக பயணிப்பதில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டு தன்னுடைய கூட்டத் தால் விரட்டப்பட்டால் மட்டுமே அவை வெளியே வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x