Published : 31 Dec 2021 09:50 AM
Last Updated : 31 Dec 2021 09:50 AM
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்துகள் பரிந்துரைச் சீட்டு வாங்கநெடுநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால், நோயாளிகளும், உறவினர்களும் அவதியுறுகிறார்கள். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று,மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் உறுதிதெரிவித்தார்.
இம்மருத்துவமனைக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசிமாவட்டங்களில் இருந்து தினமும்ஆயிரக்கணக்கான நோயாளிகள்வருகிறார்கள். நூற்றுக்கணக்கானோர் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். இதுதவிர, இங்குசிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு தொடர்ச்சியாக மருந்து, மாத்திரைகளை வழங்கமருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதற்காக நோயாளிகளோ, அவர்களது உறவினர்களோ மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டுகளுடன் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்கு வந்துசெல்கிறார்கள். அவ்வாறு வருவோருக்கு மருந்துகளை பரிந்துரைக்கும் பிரிவில் (மறுபரிசோதனை அறை எண் 10-ல்) மருத்துவர்கள் உரிய மருந்து, மாத்திரைகளை வழங்குமாறு எழுதிக் கொடுக்கிறார்கள்.
ஆனால், சமீப காலமாக இந்தபிரிவு காலதாமதமாக திறக்கப்படுவதும், பகல் 12 மணிக்குள் மூடப்பட்டுவிடுவதும், போதுமான மருத்துவர்கள் பணியில் இல்லாததுமாக சேவை குறைபாடு தொடர்வதால் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் நெடுநேரம் காத்திருந்து அவதியுறுகிறார்கள்.
அதுபோல், நேற்று நெடுநேரம் காத்திருந்த நோயாளிகள் ஆத்திரமடைந்ததால் மருத்துவமனை ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் வயதானவர்களும், நோயாளிகளும் காத்திருக்க முடியாமலும், நெடுநேரம் நின்றுகொண்டிருக்க முடியாமலும் அவதியுறுவது பரிதாபத்தை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட துறையினர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நேரத்தில் மருத்துவப் பிரிவை திறந்து உடனுக்குடன் மருந்துகளை பரிந்துரைக்கவும், போதிய மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பணியில் ஈடுபடவும் செய்தால்நோயாளிகள் தேவையின்றி காத்திருக்க நேராது என்பது பாதிக்கப்படும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் கருத்தாகும்.
இது தொடர்பாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்டாக்டர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ``இது தொடர்பாக உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT