Published : 30 Dec 2021 08:22 AM
Last Updated : 30 Dec 2021 08:22 AM
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ள திமுகவினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விழுப்புரம் திமுக மத்தியமாவட்டத்திற்குட்பட்ட நகராட்சிகளான விழுப்புரம், திருக்கோவி லூர், கோட்டக்குப்பம் நகராட்சி கள் மற்றும் வளவனூர், அரகண்ட நல்லூர், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி களில் திமுக சார்பில் போட்டியிட அமைச்சர் பொன்முடி விருப்ப மனுக்களை பெற்றார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம், விருப்ப மனு அளிப்பவர்கள் தவிர மற்ற வர்களை வெளியேறும்படி பொன்முடி கூறினார். இதை தொடர்ந்து100-க்கும் மேற்பட்ட திமுகவினர்வெளியேறினர்.அப்போது அங்கி ருந்த பத்திரிகையாளர்களிடம், ”உங்களுக்கு வேலை இல்லைபுறப்படுங்கள்” என்றார். இதனைதொடர்ந்து பத்திரிக்கையாளர் களும் வெளியேறினர்.
சிறிது நேரத்தில் விருப்ப மனு அளிக்கப்படுவதை புகைப்படம் எடுக்க வருமாறு மீண்டும் திமுக வினர் பத்திரிகையாளர்களை அழைத்தனர். இதையடுத்து ஒவ் வொருவராக அங்கு சென்றனர்.
அப்போது, முதலில் சிலபத்திரிகைகளுக்கு போட்டோவுக்குபோஸ் கொடுத்த பொன்முடி சற்றுதாமதமாக வந்த பத்திரிகையா ளர்களை விரட்டினார்.
இதனால் சற்று கோபமடைந்த பத்திரிகையாளர்கள், திமுக மாவட்ட செயலாளரான புகழேந்தி மற்றும் மாவட்ட பொருளாளரான ஜனகராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மீண்டும் அழைத்த பொன்முடி, விருப்ப மனு பெறுவதை போல போஸ் கொடுத்து அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT