Published : 30 Dec 2021 08:23 AM
Last Updated : 30 Dec 2021 08:23 AM
சிதம்பரத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், வன்னியர் வளர்ச்சி கழக மாணவர் விடுதியை பார் வையிட்டார்.
சிதம்பரத்தில் பச்சையப்பன் பள்ளி தெருவில் வன்னியர் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இயங்கி வந்த பழமை வாய்ந்த மாணவர்விடுதியை தமிழக பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று ஆய்வுசெய்தார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியது:
தமிழக முதல்வரின் அறிவுறுத்த லின் படி பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் செயல்படும், வன்னியர் பொது சொத்து நல வாரியத் தின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பணிகளை தொடங்க இருக்கி றோம். தமிழ்நாடு முழுவதும் வன்னியர் அமைப்பினர் ஏற்படுத் திய சொத்துக்கள் பாதுகாக்க படாமலும் செயல்படாமல் இருந்தால் அவற்றை அச்சமூக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொண்டு வரு கிறோம்.
அந்த வகையில் சிதம்பரம் நகரில் பச்சையப்பன் பள்ளி தெருவில் வன்னியர் வளர்ச்சி கழகம் என்ற அமைப்பின் மூலமாக மாணவர் விடுதியாக 1975-ம் ஆண்டு இயங்கி வந்தது. இந்த விடுதி காலப்போக்கில் செயல்படாமல் போய்விட்டது, இருபது ஆண்டுகள் முன்பாக புதிய கட்டிடங்கள் கட்டி தொடங்கியுள்ளனர். ஆனால் அதுவும் முழுமையாக நடைபெறாமல் பாதியில் நிற்கிறது. வன்னியர் வளர்ச்சி கழகத்தை நிறுவிய அறங்காவலர்கள் யாருமே இப்போது இல்லை.
இதுபோல் இடம் கள்ளக்குறிச் சியில் உள்ளது. அதையும் ஆய்வு செய்ய உள்ளோம். சிதம்பரத்தில் இயங்கி வரும் அந்தக் கட்டிடத்தை அண்ணாமலை பல்கலைக்கழகம் பொறியியல் துறை மூலமாக கட்டிடத்தின் உறுதித்தன்மை, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அவர்கள் அறிக்கை தர கேட்டுள்ளோம். அறிக்கை வந்த பிறகு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திடம் கலந்து ஆலோசித்து மேற்கண்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
வன்னியர் பொதுச்சொத்து நல வாரியத் தலைவர், சந்தானம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நிறுபான்மையினர் நலத் துறை அலுவலர் விக்னேஷ்வரன், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி,திமுக நகர செயலாளர் செந்தில் குமார், முன்னாள் நகர மன்ற தலைவர் சந்திரபாண்டியன், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் விஜயசுந்தரம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT