Published : 30 Dec 2021 09:15 AM
Last Updated : 30 Dec 2021 09:15 AM

தஞ்சாவூரில் இன்று நடைபெறும் அரசு விழாவில் 43 ஆயிரம் பேருக்கு முதல்வர் நலத்திட்ட உதவி வழங்குகிறார்

தஞ்சாவூரில் முதல்வர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ள பந்தல்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.237 கோடியில், 43 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.30) வழங்க உள்ளார்.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மைதா னத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (டிச.30) காலை 10 மணிக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள் ளது. இதற்காக பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.237 கோடி மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை 43 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்குகிறார். மேலும், ரூ.98 கோடியே 77லட்சம் மதிப்பில் முடிவுற்ற 910 பணிகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, ரூ.894 கோடியே 6 லட்சம் மதிப்பிலான 133 பணி களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 2-ம் உலகப்போர் நினைவாக அமைக்கப்பட்ட மணிக்கூண்டுடன் கூடிய ராஜப்பா பூங்கா ரூ.3.36 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளதையும், தஞ்சாவூர் கீழவாசலில் சரபோஜி சந்தையில் ரூ.15.25 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 309 கடைகளையும் முதல்வர் திறந்து வைக்கிறார். மேலும் மண்டல கண் மருத்துவமனைக்கான புதிய கட்டிடத்தையும் திறந்து வைக்கும் அவர், அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தை ரூ.5 கோடியில் மேம்படுத்தும் பணிக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவில் மொத்தம் ரூ.1,229 கோடியே 83 லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி. முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். விழாவில் அமைச் சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின் றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு தஞ்சாவூருக்கு வந் ததையொட்டி, பொதுப்பணித் துறை அலுவலகம், தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் ராஜப்பா பூங்கா ஆகியவை மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x