Published : 30 Dec 2021 08:07 AM
Last Updated : 30 Dec 2021 08:07 AM
வந்தவாசி அருகே நம்பேடு கிராம ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கியதில் ரூ.31 லட்சம் அளவுக்கு நடைபெற்றுள்ள முறைகேடு புகாரில் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள நம்பேடு கிராம ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் செய் துள்ளதாக அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கடந்த 2012 முதல் 2020 வரை நடைபெற்ற பணிகள், சம்பளம் வழங்கியது மற்றும் பயனாளிகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்தனர். இதில், அரசின் நிதியை ரூ.31 லட்சத்து 21 ஆயிரத்து 207 அளவுக்கு முறைகேடுகள் செய்திருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
இது தொடர்பாக நம்பேடு கிராம ஊராட்சியின் முன்னாள் செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, ராஜ சேகர், நாராயணமூர்த்தி, பிரேமா மற்றும் தற்போதைய செயலாளர் சந்தோஷ் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரோசா மணி, தற்போதைய தலைவர் ஆஷா, பயனாளிகள் சரஸ்வதி, செந்தில், தெய்வானை, அம்மு ஆகிய 11 பேர் மீது திருவண்ணா மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன் சில நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்துள்ளார். இவர்கள் 7 வகையான வழிகளில் அரசின் நிதியை முறைகேடு செய்துள்ளனர்.
இதில், நம்பேடு கிராமத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேறிய 17 பேரின் பெயரில் அடையாள அட்டை வழங்கி 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்ததாக ரூ.8.73 லட்சம் முறைகேடு செய் துள்ளனர். 28 போலி பெயர்களில் பணி செய்ததாக ரூ.11.72 லட்சம் முறைகேடு, பெரணமல்லூர் கூட்டுறவு வங்கியில் வேலை செய்யும் ராஜீவ்காந்தி என்பவரது பெயரில் 100 நாள் திட்டத்தில் பணி அடையாள அட்டை வழங்கி ரூ.9,040 முறைகேடு செய்துள் ளனர்.
அதேபோல், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் ஒரு குடும் பத்தில் ஒருவருக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்ற விதியை மீறி கடந்த 2012 முதல் 2020 வரை 7 தம்பதிகள் பெயரில் தனித்தனி குடும்பம் என கணக்கு காட்டி ரூ.3.25 லட்சம் முறைகேடு செய்துள்ளனர்.
6 பயனாளிகளின் அடையாள அட்டையை உறவினர்களுக்கு வழங்கி பணி செய்ததுடன் விதிகளை மீறி அவர்கள் 200 நாட்கள் பணி செய்ததாக கணக்கு காட்டி ரூ.3.91 லட்சம் முறைகேடு செய்துள்ளனர்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பிரபாகரன், ராஜம்மாள் ஆகியோர் 100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் பணி செய்ததாக ரூ.54,860 தொகை பெற்று முறைகேடு செய்துள்ளனர். குடும்ப உறுப்பினர்களுக்கு முறைகேடாக பணி அடையாள அட்டைகளை வழங்கி விதிகளை மீறி 200 நாள் பணி செய்ததாக ரூ.2.95 லட்சம் தொகை முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ள ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோரை விரைவில் விசாரணைக்கு அழைக்க லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT