Published : 29 Dec 2021 07:40 AM
Last Updated : 29 Dec 2021 07:40 AM

மனநிலை பாதித்தவர்களுக்கு திருப்பூரில் முடிதிருத்தம்

திருப்பூர்

உலக மாசற்ற குழந்தைகள் தினம் மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டி, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையோரத்தில் வசிக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் என 120 பேருக்கு நேற்று முடி திருத்தம்செய்து, புதிய ஆடைகள் வழங்கப்பட்டன. நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு என். தெய்வராஜ் தலைமை வகித்தார். அதன்பின் அவர் கூறும்போது, ‘‘எங்கள் அறக்கட்டளை மூலம் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் கடந்த 21 ஆண்டுகளாக, சாலையோரம் வசிக்கும் முதியோர், மனநிலை பாதித்தவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நாள்பட்ட நோயாளிகள் என பலருக்கும் முடிதிருத்தம் செய்து அவர்களுக்கு உணவு, உடை மற்றும் குடிநீர் வழங்கி வருகிறோம். தற்போது மாநகரில் 120 பேருக்கு இந்த உதவிகளை செய்துள்ளோம்’’ என்றார். அறக்கட்டளை நிர்வாகிகள் சிவகாமி, சண்முகராஜ், செல்வராஜ், கோமதி உட்பட பலர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x