Published : 29 Dec 2021 03:46 PM
Last Updated : 29 Dec 2021 03:46 PM

சேலம்: சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகப் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

சேலம் ஆட்சியர்

சேலம்

சேலம் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர் மற்றும் தரவு உள்ளீட்டாளர் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது..

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறையில் மாவட்ட ஆலோசகர் , சமூக பணியாளர், தரவு உள்ளீட்டாளர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட ஆலோசகர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.35,000, சமூக பணியாளர் பணிக்கு ரூ.13,000, தரவு உள்ளீட்டாளர் பணிக்கு ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும். இப்பணி ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிகப் பணியாகும்.

இப்பணிக்கு வயது வரம்பு 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மாவட்ட ஆலோசகர் பணிக்கு பொது சுகாதாரம் (அ) சமூக அறிவியல் (அ) நிர்வாகம் (அ) தொடர்புடைய துறையில் ஒன்றில் முதுகலைப் பட்டப்படிப்பு (அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம், பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டப்படிப்பு (அ) எம்பிபிஎஸ், பிடிஎஸ் பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சமூக ஆர்வலருக்கு கல்வி தகுதியாக சமூகவியல், சமூக சேவகர் ஆகியவற்றில் முதுகலைப் பட்டப்படிப்பு அல்லது சமூகவியல், சமூக சேவகர் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தரவு உள்ளீட்டாளருக்கு இடைநிலை பள்ளி கல்வி (10, பிளஸ் 2) மற்றும் கணினி அனுபவம் ஆகியவற்றுடன் குறைந்தது ஒரு ஆண்டு தரவு உள்ளீட்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் salem.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேலம் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x