Last Updated : 06 Mar, 2016 09:40 AM

 

Published : 06 Mar 2016 09:40 AM
Last Updated : 06 Mar 2016 09:40 AM

சாதகமான தொகுதிகளை தேர்வு செய்து தேர்தல் பணிகளை தொடங்கிய சிறிய கட்சிகள்

தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமில்லை. திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட பெரிய கட்சிகளைத் தாண்டி நூற்றுக்கும் அதிகமான சிறிய கட்சிகளும் உள்ளன. இவை பெரும்பாலும் பெரிய கட்சிகளை நம்பியே அரசியல் நடத்தி வருகின்றன. ஒவ்வொரு தேர்தலின்போதும் எப்படியாவது ஒரு கூட்டணியில் சேர்ந்து ஒன்றிரண்டு தொகுதிகளை பெற முயற்சிக்கின்றன.

இந்நிலையில், தற்போதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இந்த கட்சிகள் தயாராகி வரு கின்றன. தேமுதிக கூட்டணிக்காக திமுகவும், தேமுதிகவின் முடிவுக்காக அதிமுகவும் காத்திருப் பதால் சிறிய கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாமல் தவித்து வருகின்றன. எனினும், தங் களுக்கு தேவையான தொகுதி களை கண்டறிந்து அங்கு தேர்தல் பணிகளை அக்கட்சிகள் தொடங்கியுள்ளன.

மனிதநேய மக்கள் கட்சி, எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்பது உறுதியாகாவிட்டாலும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ராமநாதபுரம், ஆம்பூர், மயிலாடு துறை ஆகிய தொகுதிகளை மனதில் கொண்டு அங்கு மக்கள் சந்திப்புகளை அக்கட்சியினர் நடத்தி வருகின்றனர். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ஒட்டப் பிடாரம், தென்காசி, நிலக் கோட்டை தொகுதிகளில் மக்களை சந்தித்து வருகிறார்.

இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், அதிமுக கூட்டணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று கருதி, கே.வி.குப்பம் தொகு தியில் பணிகளை தொடங்கி யுள்ளார். அதிமுக கூட்டணிக்காக காத்திருக்கும் மூவேந்தர் முன்ன ணியோ பேராவூரணி, பட்டுக் கோட்டை, மதுரை திருமங்கலம் தொகுதிகளில் தேர்தல் வேலை களைத் தொடங்கியுள்ளது.

கொங்குநாடு தேசிய மக்கள் கழகத் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் தொகுதிகளை குறிவைத்து, அங்கு தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறார். அதிமுக கூட்ட ணிக்காக காத்திருக்கும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென் காசி, கிருஷ்ணராயபுரம், ஒட்டப்பி டாரம், நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளை எதிர்பார்த்து பணிகளை செய்து வருகிறது.

நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக், திரு நெல்வேலி தொகுதியில் போட்டி யிடும் எண்ணத்தில், தனது கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சேதுராம பாண்டிய னின் சிலை திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்ட மிட்டுள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சி யைத் தொடங்கியுள்ள தமிமுன் அன்சாரி, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி யிலும் மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் தர் வாண்டையார் சிதம்பரம் தொகு தியிலும் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x