Published : 28 Dec 2021 08:57 AM
Last Updated : 28 Dec 2021 08:57 AM

நெல் கொள்முதல் நிலையங்களில் இணையவழியில் முன்பதிவு செய்யலாம்: காஞ்சி மாவட்ட நிர்வாகம் தகவல்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதற்காக, விவசாயிகள் இணையவழியில் முன்பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில், அனைத்து மாவட்டங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் முன்பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்வதற்காக, சம்பா கொள்முதல் பருவம் 2022-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in அல்லது www.tncsc-edpc.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்யலாம்.

மேலும், இந்த இணையதளங்களில் எதிர்வரும் சம்பா பருவம் 2022-ல் இணையவழி பதிவு முறையின் (online) மூலம் பதிவு செய்துவிவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்து நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களான பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் உள்ளிட்டவற்றைஇணையத்தில் பதிவேற்றம்செய்யலாம். பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடிநெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும்.

விவசாயிகள் தங்களது அலைபேசி எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x