Published : 26 Mar 2016 11:01 AM
Last Updated : 26 Mar 2016 11:01 AM

சாலை பாதுகாப்பு 5: விபத்துகளை தடுக்க சாலை வடிவமைப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

குண்டு குழிகளாகவும், இரவில் விளக்குகள் இல்லாமலும் வாகனங்களின் வெளிச் சத்தை மட்டுமே நம்பி செல்லும் சாலைகள் நம் ஊரில் இன்னும் அதிகமாகத்தான் இருக்கின்றன. குறிப்பாக அண்ணாசாலை, பூந்த மல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட ஒரு சில முக்கியமான சாலைகளை தவிர, முழுமையான பராமரிப்பு, சிக்னல் இல்லாமல் ஏராளமான சாலைகள் இருக்கின்றன. சாலை வடிவமைப்புகளை தொலை நோக்கு பார்வையுடன் திட்டமிடாத தும், முறையாக பராமரிக்காததும் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

சாலை வடிவமைப்பை மேம் படுத்துவது, மக்களுக்கு தேவை யான தகவல்களை அளிப்பது, அவசரகால மீட்பு, விபத்து தொடர் பாக பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்துவது ஆகியவற் றின் மூலம் சாலை விபத்து மற்றும் இறப்புகளை குறைக்க முடியும். சாலையில் மூடாமல் இருக்கும் பாதாள சாக்கடை குழியில் விழுந்து விபத்து, சாலையில் அமைக்கப் பட்டுள்ள வேகத்தடையால் ஏற் படும் விபத்து, தேவையான இடங் களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை இல்லாதது, தரமற்ற சாலை அமைப் பது, பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல வசதியின்மை, தேவையான இடங்களில் சாலை விரிவாக்கம் செய்யாதது உள்ளிட்டவை சாலை வடிவமைப்பின் குறைபாடுகளை காட்டுகின்றன.

சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்டு சிவில் ஆக் ஷன் குரூப் (சிஏஜி) என்ற அமைப்பின் இயக்குநர் (ஆலோ சகர்) எஸ்.சரோஜா, ஆய்வாளர் சுமனா நாராயணன் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து கூறிய தாவது:

சாலை விபத்துகளை குறைக்க சாலை வடிவமைப்பு முக்கியமான தாக இருக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஏற்றார்போல் சாலை வடிவமைப் பில் தொலைநோக்கு திட்டங்களை வகுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட பகுதிகள் அல்லது உள் நகரங்களில் இருந்து நெடுஞ்சாலை களை இணைக்கும் இடங்களில் போதிய அளவில் துணை சாலை களை அமைக்க வேண்டும். ஓட்டு நர்களுக்கு போதிய அளவில் ஓய்வு மையங்களும், அவசர மருத்துவ வசதி அளிக்கும் மையங்களும் அமைக்க வேண்டும். நெடுஞ்சாலை யில் வாகனங்கள் வேகமாக செல் லும் என்பதால், எதிரே வரும் வாக னங்களை பார்த்து வாகனங்களை கட்டுக்குள் கொண்டு வரும் வகை யில் சாலைகள் நேராக இருக்க வேண்டும். பெரிய வளைவுகளை நீக்க வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் வேகமாக செல்வோருக்கும், வேகம் குறை வாக செல்வோருக்கும் தனிப்பாதை கள் உண்டு. வேகமாக செல்லும் சாலையில் மெதுவாக சென்றாலும், மெதுவாக செல்லும் சாலையில் வேகமாக சென்றாலும் அபராதம் விதிக்கப்படும்.

முக்கிய நகரங்களின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரி சல், மாற்று வழி, ஒவ்வொரு இடத் துக்கும் செல்ல தேவையான நேரம், தற்போதைய நிலை என்ன என்பதை மக்கள் அறிய தகவல் பலகை அல் லது எஸ்எம்எஸ் வசதியை கொண்டு வர வேண்டும். அப்போது, போக்கு வரத்து நெரிசலும் குறையும், விபத்துகளையும் குறைக்க முடியும். மேலும், சாலையில் ஒரு பகுதியில் அகலமாகவும், மற்றொரு பகுதியில் குறுகியதாகவும் இருப்பதை தவிர்க்க வேண்டும். பாதாள சாக்கடை குழிகளை முறையாக அமைத்து பராமரிக்க வேண்டும். வேகத் தடைகளை ஒரே அளவில் அமைக்க வேண்டும். தேவையான இடங்களில் வாகனங்கள் நிறுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x