Published : 26 Dec 2021 06:45 PM
Last Updated : 26 Dec 2021 06:45 PM

ஒமைக்ரான் பரவலையும் கண்டுகொள்ளாமல் ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தை அமாவாசை அன்று போல் நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் கூடிய பக்தர்கள் கூட்டம்.

ராமநாதபுரம்: தொடர் விடுமுறையை முன்னிட்டு ஒமைக்ரான் பரவலையும் கண்டுகொள்ளாமல் ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

கிறிஸ்துமஸ், வார விடுமுறை மற்றும் பள்ளி அரையாண்டுத் தேர்வு விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடற்கரையில் குளித்து ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் தை அமாவாசை நாட்களில் ஏற்படும் கூட்டம் போல் நேற்று இருந்தது. மேலும் புயலால் அழிந்த தனுஷ்கோடி, மேலும் நாட்டின் எல்லைப்பகுதியான அரிச்சல்முனை கடற்கரையை ரசிக்கவும், பாம்பன் பாலம் மற்றும் ரயில் பாலத்தை ரசிக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

தமிழகம் மட்டுமல்லாது வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சுற்றுலா பயணிகள் குவிந்தததால் நேற்று ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை ஒழுங்குபடுத்தினர். மேலும் ஆபத்தை உணராமல் தனுஷ்கோடி கடலில் குளித்த சுற்றுலாப் பயணிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

ஒமைக்ரான் பரவி வரும் நிலையிலும், பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் கூட்டம் கூட்டமாக கூடியது கரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என ராமேசுவரம் மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x