Published : 04 Mar 2016 09:48 AM
Last Updated : 04 Mar 2016 09:48 AM
சட்டப்பேரவைத் தேர்தலில் மீண் டும் போட்டியிட வாய்ப்பும், தேர் தல் பொறுப்புகளும் கிடைக்குமா என அதிமுகவைச் சேர்ந்த முன் னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் ஏக்கத்துடன் காத்திரு கின்றனர்.
இந்த முறை எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக இருக்கிறது. அதற்காக மெகா கூட்டணி அமைக்கும் முயற் சியில் இறங்கியது. முதல் ஆளாக, காங்கிரஸை கூட்டணிக்குள் சேர்த்துவிட்டது. இதைத் தொடர்ந்து தேமுதிகவை இழுக் கும் முயற்சியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தேமுதிகவின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்பட்டால், திமுக கூட்டணி வலுவானதாகிவிடும் என கருதப் படுகிறது.
ஆனால், அதிமுகவில் இது வரை கூட்டணி குறித்த எந்த அறி விப்பு வரவில்லை. அதனால், ஜெயலலிதாவின் அறிவிப்பை எதிர்பார்த்து அக்கட்சி நிர்வாகி கள், தொண்டர்கள் காத்திருக் கின்றனர். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, சமக, புதிய தமிழகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்த முறை இல்லை. அதனால், அதிமுக பலமான கூட்டணியை அமைக்க வாய்ப்பில்லை. சில கட்சிகளுடன் கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்து சொந்த செல்வாக்கை நம்பியே நிற்க வேண்டிய இருக்கிறது.
இதற்கிடையே, திமுக மெகா கூட்டணியை சமாளிக்க சில ரகசிய வியூகங்களை அதிமுக வகுத்து வருவதாக கூறப்படுகிறது. தொகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்ற, தேர்தல் வியூகம் அமைப் பதில் கைத்தேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகள் பலருக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப் பும், தேர்தல் பொறுப்பும் வழங் கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது, அவர்களிடையே மகிழ்ச் சியை ஏற்படுத்தி இருந்தாலும் கட்சித் தலைமையின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு எப்போது வருமோ என்ற ஏக்கத்துடன் உள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘வடமாவட்டங் களில் இந்த முறை வன்னியர் வாக்குகள் பாமகவுக்கு அதிகமாக செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதேபோல தலித் வாக்குகளும் மக்கள் நலக்கூட்டணி பக்கம் திரும்பக்கூடும். இதை சமாளிக்க வன்னியர்கள் அதிகமுள்ள மாவட் டங்களில் அந்த சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிக ளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங் கப்படலாம் என கூறப்படுகி றது. கட்சியில் தற்போது ஓரங்கப் பட்டுள்ள கிருஷ்ணகிரி கே.பி.முனுசாமி, தருமபுரி கே.பி.அன்பழகன், விழுப்புரம் சி.வி.சண்முகம் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்க லாம். அதேபோல கொங்குமண்ட லத்தில் தேர்தல் வியூகம் வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் மாநிலப் பொருளாளர் திண்டுக்கல் சி.சீனி வாசன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேனி மாவட்டத்தில் தங்க தமிழ்செல்வன், திருநெல் வேலி மாவட்டத்தில் நயினார் நாகேந்திரன் என ஒவ் வொரு மண்டலத்திலும் ஏதோ ஒரு காரணத்தால் ஓரங்கட்டப் பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கள், முக்கிய நிர்வாகிகளுக்கு இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT