Published : 25 Dec 2021 10:19 AM
Last Updated : 25 Dec 2021 10:19 AM
காட்பாடி அருகே உள்ள ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், 3 நாட்களில் மட்டும் 65 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஓரிரு நாளில் இந்த தடத்தில் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், திருவலம் பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், கட்டப்பட்ட ரயில்வே பாலத்தில் 38 மற்றும் 39-வதுதூண்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை, ரயில்வே பணியாளர்கள் நேற்று முன்தினம் கண்டறிந்த நிலையில், கடந்த 2 நாட்களாக இந்த வழியாக செல்லும் ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை, வேலூர், பெங்களூரு, கோயம்புத்தூர், மைசூரு, மங்களூர் உட்பட 65 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் இருந்து இந்த வழியாக இன்று (25-ம் தேதி) செல்ல வேண்டிய 30 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளையும் (26-ம் தேதி) சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என தெரிகிறது. இதுவரையில் மொத்தம் 65 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், ரயில் பயணிகள் அவதிப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, ரயில்வே பாலத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே பொறியாளர்கள் குழுவினர் நேற்று முன்
தினம் இரவு முதல் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வரு கின்றனர். ரயில்வே பாலம் சீரமைப்புப் பணிகளை சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று பிற்பகல் ஆய்வு செய்தனர்.
சீரமைப்புப் பணி பாதிப்பு
அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பொன்னை ஆற்றில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் ரயில்வே பாலம் பழுதடைந்திருப்பது தெரிய
வந்துள்ளது. பாலத்தை முழு மையாக ஆய்வு செய்து வரு
கிறோம். பொன்னை ஆற்றில் நீர்வரத்து இருப்பதால் சீரமைப்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போதைக்கு தொலைதூர ரயில்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. உள்ளூர் ரயில்களைமட்டும் ரத்து செய்துள்ளோம். விரைவில் போக்குவரத்து தொடங்குவதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகிறது’’ என்றார்.
அதேபோல், மைசூரு, பெங்களூரு, கோவையில் இருந்து இன்றும் நாளையும் சென்னை வரை இயக்கப்படும் 3 ரயில்கள் காட்பாடி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT